செவ்வாய், 24 மார்ச், 2020

பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர்


பதினெட்டு சித்தர்களுக்கு முன்
இரேதாயுகத்தில் இரண்டு லட்சம்
திரேதாயுலகத்தில் ஒரு லட்சம்
துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம்
கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம்
ஆகமொத்தம் 375000 சித்தர்கள்
தோன்றினர் .

சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும்
சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி,
உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய
உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், 

இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.

முதல் தகுதி: சித்தத்தை அடக்க வல்லவர்கள்.

இரண்டாம் தகுதி: எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்.

மூன்றாம் தகுதி: முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.

நான்காம் தகுதி: பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக
ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.

ஐந்தாம் தகுதி: உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு
முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக்
கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள்.

இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன்
இரேதாயுகத்தில் இரண்டு லட்சம்
திரேதாயுலகத்தில் ஒரு லட்சம்
துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம்
கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம்
ஆகமொத்தம் 375000 சித்தர்கள்
தோன்றினர் என்று தேரையர்
கூறுகின்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக