வியாழன், 10 மே, 2018

தமிழ் மொழியை வளர்த்த சமணர்களின் மலை கோவில்..!! வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்..!!!

தமிழ் மொழியை வளர்த்த சமணர்களின் மலை கோவில்..!! வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்..!!!



தமிழ் மொழியை வளர்த்த சமணர்களின் மலை கோவில்..!! வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டும்..!!!

சமணர்களின் புனிதமான கோயில்…
உலகமெங்கிலும் பரவியிருக்கிற சமணர்கள், தமிழ் நாட்டிற்கு வந்து, தமிழ் மொழியை வளர்த்தனர். அவர்கள் வாழ்ந்த மலையில் உள்ள மிகப் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் இதனை நிரூபிக்கின்றன. உலக மக்கள் அனைவரும் ஒரே இனம், என்ற கொள்கை உடைய சமண மதத்தின் தலைமையிடமான சரவணபெலகோலா கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
பெங்களுரிலிருந்து, 158 கி.மீ. தொலைவில், ஹாசன் மாவட்டத்தில், சந்திரராயன் என்ற நகருக்கு அருகிலேயே உள்ளது. சரவணபெலகோலாவில் ரயில் நிலையம் இருக்கிறது. எனவே, ரயிலில் செல்பவர்கள், இந்த வசதியைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இந்த மலையின் மற்றொரு பெயர், பேர்கல் காப்பு. விந்தியகிரி மலை என்றும் அழைக்கப் படுவது உண்டு. கடல் மட்டத்திலிருந்து, 1020 மீட்டர் உயரமுள்ள, இந்த மலைக்குச் செல்ல, விந்தியகிரியின் மலை உச்சியை அடைய 614 படிகளில் ஏற வேண்டும்.
மலையிலேயே குடைந்து படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார்கள். மேலே செல்பவர்களுக்கு, ஒரு படிக்கட்டு, இறங்குவதற்கு ஒரு படிக்கட்டு என்று தனித்தனியாக, அருகருகே அமைக்கப் பட்டுள்ளது. சரவணபெலகோலா, இந்திரகிரி, சந்திரகிரி என்ற இரண்டு மலைகளுக்கு இடையே உள்ள மலையில் அமைந்துள்ளது. 
மலையேறும் போதே, துாரத்தில் அந்தப் பிரம்மாண்ட சிலையின் தலைப்பகுதி தென் படும். படிகளில் ஏறிச் செல்வது கடினமாக இல்லை. ஆங்காங்கே, சற்று இளைப்பாறிக் கொண்டே, செல்லலாம். சமணர்களின் புனிதக் கோயிலான இங்கு, வாழ்நாளில் ஒரு முறையாவது வந்து வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள், சமண மதத்தைச் சார்ந்தவர்கள்.
சிலையைச் சுற்றி, வசதியான மண்டபங்களும், உண்டு. இரவில் மின்னொளியில் இந்த சிலையை ரசிப்பது அலாதியான அனுபவம். மண்டபத்தின் மேலே சென்று, சிலையையும், சுற்றுப் புறத்தையும் ரசிக்கலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக