செவ்வாய், 12 ஜூன், 2018

மனித நாகரிக வாடைபடாமல் யார் வந்தாலும் கொல்ல துடிக்கும் காட்டு வாசிகள்

மனித நாகரிக வாடைபடாமல் யார் வந்தாலும் கொல்ல துடிக்கும் காட்டு வாசிகள்

இந்க் பதிவில் நாம், மனித நாகரிகம் என்றால் என்னவென்று கூட தெரியாமல் மனிதர்கள் யாரேனும் சென்றால் கொல்ல துடிக்கும் தீவு மற்றும் அத்தீவில் வடிக்கும் காட்டு வாசிகளை பற்றி பார்க்க போகிறோம்.
அந்தமான்
அந்தமான் அருகில் அமைந்துள்ளது NORTH SENTINAL ISLAND இந்த தீவில் காட்டுவாசி இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்களது வாழ்க்கை முறை பல்லாயிரம் ஆண்டிற்கு முன்பு வசித்த காட்டு வாசிகளை போல் உள்ளது.
மனித நாகரிக வாடை கூட இல்லாமல் இருக்கும் தீவு
இந்த தீவில் வேற்று மனிதர்கள் யாரேனும் வந்தால் கணடிப்பாக அவர்களது உயிர் போவது உறுதி. ஏனெனில் அந்த தீவில் வசிக்கும் காட்டு வாசிகள் வேற்று மனிதர்களை கூட பார்த்ததில்லை, அதை மீறி வேற்று மனிதர்கள் யாரேனும் சென்றால் அவர்களை அம்பு விட்டு தாக்குவது கல் கொண்டு எறிவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருமுறை இந்திய அரசங்கத்தில் இருந்து DOCUMENTRY குழு அவர்களது வாழ்க்கை முறையை பற்றி அறியவும் அவர்களது மொழி போன்றவற்றை பற்றி அறியவும் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.
ஆனால் அத்தீவில் உள்ள மக்கள் அவர்களது ஹெலிகாப்டர் ஐ பார்த்து கல் கொண்டு எரிந்து மற்றும் அம்பு விட்டு தாக்கியும் உள்ளனர்.மேலும் documentry குழு கொண்டுசென்ற உணவு பொட்டலங்களை கீழே உள்ள காட்டு வாசிகளுக்கு கொடுத்துள்ளனர் ஆனால் அவர்கள் அதையும் எடுத்து எரிந்துள்ளனர்.
இதே போல் பலமுறை அவர்களை பற்றி அறிய பல குழுக்கள் சென்றுள்ளது ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.
இதனால் அந்த தீவிற்கு மனிதர்கள் செல்ல இந்திய அரசாங்கம் தடை விதித்துவிட்டது.
ஒருமுறை அந்தமான் சிறையிலிருந்து ஒட்டு கைதி தப்பி இந்த தீவிற்கு வந்துள்ளார். மூன்று நாட்களுக்கு பிறகு அவரின் உடல் அந்தமான் தீவின் கரை பகுதியில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. மேலும் அவரது உடலில் பலத்த காயங்களும் வெட்டுகளும் விழுந்துள்ளது.அவரை அந்த காட்டு வாசிகள் கொடூரமாக கொலை செயத்துள்ளனர். இதற்கு அவர் சிறையிலேயே இருந்திருக்காலம்.
ஒரு முறை அந்த தீவின் அருகில் கப்பல் ஒன்று என்ஜின் பழுது காரணமாக நின்றுவிட்டது. இந்த கப்பலை பார்த்த காட்டுவாசிகள் கடலில் குதித்து கப்பலை நோக்கி நீந்த ஆரமித்துள்ளனர் இதனை பார்த்த கப்பலின் மாலுமிகள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காற்றின் உதவியுடன் கப்பல் நகர தொடங்கியுள்ளது மேலும் என்ஜினில் ஏற்பட்ட பழுதும் சரி செய்ய பட்டு தப்பி விட்டனர்.
இந்த தீவை பற்றிய கருத்துகளை கமெண்ட் செய்யவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக