சனி, 23 ஜூன், 2018

பாளையங்கோட்டை... பற்றி




பாளையங்கோட்டை... பற்றி

தகவல்-1

முன்பு தனி நகராட்சியாக செயல்பட்டு
வந்த பாளையங்கோட்டை இப்போது
திருநெல்வேலி மாநகராட்சியின்
ஓர் அங்கமாக இருக்கிறது.

இங்கு தான்
கல்விநிறுவனங்களும்
அரசு அலுவலகங்களும்
அமையப்பெற்றுள்ளன.

தாமிரபரணி ஆற்றுக்கு
மேற்குப்பக்கம் திருநெல்வேலி.

கிழக்குப்பக்கம்
பாளையங்கோட்டையின்
பகுதிகளான கொக்கிரகுளமும்
வண்ணார்பேட்டையும்.

மூன்று கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவர்களுக்கு.

இரண்டு கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவிகளுக்கு.

அரசு மருத்துவக்கல்லூரி,
அரசு பொறியியல் கல்லூரி,
அரசு சட்டக்கல்லூரி,
அரசு சித்த மருத்துவக்கல்லூரி,
நீதிமன்றங்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட காவல்துறை அலுவலகம்
என்று இவை எல்லாம் உள்ளது  பாளையங்கோட்டையில் தான்.

மத்திய சிறைச்சாலை கூட
பாளையங்கோட்டையில் தான்.

அந்தக்காலத்திலேயே
நிறுவப்பட்ட "சேட்டிலைட் "
நகரப் பகுதிகள்தான்
இன்றைய
பெருமாள்புரமும்
மகராஜநகரும்.

மதுரையில் SS காலனி,
கோவையில் RS புரம் போலத்தான்
பாளையில் இவையிரண்டும்.

திருநெல்வேலியையும்
பாளையங்கோட்டையையும்
இணைப்பது
சுலோச்சன முதலியார் பாலம்.

தாமிரபரணி ஆற்றை அடுத்து
மாவட்ட அறிவியல் மையத்தை
ஒட்டினாற்போல்
சிறிய ஓடை ஒன்று உள்ளது.

இந்த ஓடை அருகிலேயே
ஓடும் ஆற்றில் போய்
கலந்துவிடும்.

1950 களுக்கு முன்பு பிறந்த
பெரியவர்கள் இந்த ஓடைபற்றி
நன்கு அறிவார்கள்.

இந்த ஓடையின் பெயர்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை."

இந்த ஓடையில் ஒரு நாள்
நீர் பெருக்கெடுத்துவருகிறது.

பலமாக வீசிய காற்றில்
பலா மரத்திலிருந்து
இந்த ஓடையில் விழுந்த
பலாப்பழம் ஒன்று நீரினால்
வேகமாக அடித்து வரப்பட்டு
மிதந்து வருகிறது.

கையில் கைக்குழந்தையுடன்
கரையில் நின்றுகொண்டிருந்த
பெண் ஒருத்தி
இதைப்பார்க்கிறாள்.

பலாப்பழத்திற்கு
ஆசைப்படுகிறாள்.

கையிலுள்ள குழத்தையை
கரையோரத்தில் வைத்துவிட்டு
பலாப்பழத்தை எடுக்க
நீரில் பாய்கிறாள்..

பழத்தை பிடித்து கரைக்கு
கொண்டு வருகிறாள்.

இதற்கிடையில் கரையில்
கிடத்தப்பட்ட குழந்தையை
நீரின் வேகம் இழுத்துக்கொண்டு
சென்று விடுகிறது.

பழத்தைப்பிடித்து கரைசேர்த்த
தாயால்  குழந்தையைக்காப்பாற்ற
இயலவில்லை..

இந்த ஓடையைத்தான்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை"
என்று கூறி வந்தனர்.

இப்போதும்
இந்த ஓடை உள்ளது.

தண்ணீர் வருவதுமாதிரி
தெரியவில்லை..

காரணப்பெயரும்
இப்போதைய மக்களுக்கு
தெரியாமல் போய்விட்டது...

--தொடரும்..

*பாளையங்கோட்டை பற்றி.....*

*தகவல்-2*

*அந்தக்காலத்தில்*
*பாளையங்கோட்டையில்*
*"மனோரமா பில்டிங்"* என்பது
பெயர் பெற்ற
*ஒரு பெருங்கட்டிடம்.*

*வ.உ.சி மைதானத்திற்கு*
*தெற்குபக்கம் .....*
இப்போது
எல்ஐசி கிளை அலுவலகம்,
கோட்ட அலுவலகம் மற்றும்
அலுவலர் குடியிருப்பு இருக்கும்
அந்த பெரிய மனையில்
கம்பீரமாக காட்சியளித்த
இரண்டடுக்கு கட்டிடமாக
காண்போர் *கண்கவர்*
*மாளிகையாக* *திகழ்ந்ததுதான்*
*"மனோரமா பில்டிங்"*

*மேற்குப்பக்கம்*
*திருவனந்தபுரம் சாலை* யும்
*கிழக்குப்பக்கம்*
*இக்னேஷியஸ்* *பள்ளி* யும்
இதன் வளாகத்தின்
*எல்லைகளாக இருந்தன.*

"மனோரா பில்டிங்" கின்
பரந்து விரிந்த *வளாகத்தில்*
*வேப்பமரங்களும்*
*புளியமரங்களும்*
நிறைந்திருந்து
*நிழல் கொடுத்துவந்தன.*

அந்த கட்டிடத்தை
வடிவமைத்து படைத்தவர்கள்
*திரு அப்பாசாமிபிள்ளை*
*-திருமதி மனோரமா*
*தம்பதியர்.*

*திருமதி மனோரமா அம்மையார்*
*பெயரைத்தான் இந்த கட்டிடம்*
*தாங்கிநின்றது.*

ஒரு காலகட்டத்தில்
இந்த சொத்தை
*இத் தம்பதியர்*
திருநெல்வேலியிலிருந்து
இயங்கிவந்த
*ஒரு தனியார்*
*ஆயுள் இன்ஷ்யூரன்ஸ்*
*நிறுவனத்திற்கு*
*நன்கொடையாக*
*வழங்கிவிட்டார்களாம்.*

*1956 ஜனவரியில்*
அவசரச்சட்டம்மூலம்
*ஆயுள் காப்பீட்டுத் தொழில்*
*நாட்டுடமையாக்கப்பட்டவுடன்*
*இந்த சொத்து* முழுவதும்
அப்படியே
*எல்ஐசி நிறுவனத்திற்கு*
*கை மாறிப் போனதாம்.*

எல்ஐசி கைக்கு வந்த
சில வருடங்களுக்குப் பின்னர்
எல்ஐசி நிறுவனத்தார்
*மேற்கு பகுதியில்* *தங்களுக்கு*
*கிளை* *அலுவலகக்கட்டிடம்*
கட்டியுள்ளனர்.

கிழக்குப்பகுதியில்
*"மனோரமா பில்டிங்"*
*இரண்டு மாடி கட்டிடமாக*
*ஒரு மாளிகை போல்*
*இருந்திருக்கிறது..*

*1960 களில் எல்லாம்*
*அந்த கட்டிடத்தில் தான்*
*மாவட்ட மைய நூலகம்*
*இயங்கி வந்திருக்கிறது.*

*மாவட்ட மைய நூலகம்*
தூய சவேரியார் கல்லூரிக்கு
எதிரில்  *இடம் மாறிய பிறகு*
"மனோரமா" கட்டிடத்தை
*மாவட்ட கல்வி அலுவலர்*
*அலுவலகத்திற்கு*
*வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.*

அரசுத்துறை அலுவலகம்
*மிகக்குறைந்த அளவு*
தொகையைத்தான்
*வாடகை* யாக கொடுத்து
வந்திருக்கின்றது.

அதையும் மாதந்தோறும்
*ஒழுங்காக*
*கொடுப்பதில்லை* யாம்.

*கட்டிடமும்*
*பராமரிப்பு இல்லாததால்*
*வலுவிழந்த நிலையில்*
*இருந்திருக்கிறது.*

இதை காரணமாகக்காட்டி
பல வருடங்களுக்குப்பிறகு
எல்ஐசி நிர்வாகம்
கட்டிடத்தை தங்களிடம்
திருப்பி ஒப்படைக்கும்படி
கல்வி அலுவலர்
அலுவலகத்தை
கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இடம் மாற
எந்த முயற்சியும்
எடுக்கவில்லையாம்.

எல்ஐசி நிர்வாகம்
வழக்குத்தொடுத்ததாம்.

வாதாடிய வழக்குரைஞர்
அலுவலகக் கட்டிடம்
பாதுகாப்பற்ற நிலையில்
உள்ளதாகவும்,
வாடகை கூட மிகக்குறைவாக
கொடுப்பதாகவும்,
அதைக்கூட  ஒழுங்காகக்
கொடுப்பதில்லை என்றும்
வாதாடினாராம்.

இதைக்கேட்ட நீதிமன்றம்
*வாடகையை ஒழுங்காகக்*
*கொடுக்கவேண்டும் என்று*
*தீர்ப்பளித்து வழக்கினை*
*முடித்துவைத்ததாம்.*

அதற்குப் பின்னரும்
மாத வாடகப்பணத்தை
ஆண்டுக்கொருமுறை
கொடுப்பதையே வழக்கமாகக்
தொடர்ந்து கொண்டிருந்தனராம்.

இந்த நேரத்தில்
எல்ஐசி நிறுவனத்தின்
கோட்ட அலுவலகம்
வாடகைக்கட்டிடத்தில்
வண்ணார்பேட்டையில்
இயங்கிவந்திருக்கிறது.

எனவே
*எல்ஐசி நிறுவனம்*
*கோட்ட அலுவலகத்திற்கு*
சொந்த *கட்டிடம் கட்ட*
*இடம் வேண்டும் என*
மாவட்ட கல்வி அலுவலர்
அலுவலகத்திற்கு *ஓலை*
*அனுப்பியிருக்கிறார்கள்.*

கல்வி அலுவலர்
அலுவலக நிர்வாகிகள்
வேறு இடம் பார்க்க
ஏற்பாடு செய்து
வந்திருக்கின்றனர்.

வேறு ஊர்களில் வேலை
பார்க்கும் சில அரசு
ஊழியர்கள் தங்கள்
இருசக்கர வாகனங்களை
இந்த அலுவலக வளாகத்தினுள்
நிறுத்திவிட்டு பாளை
பஸ் நிலையத்திலிருந்து
வேறு ஊர்களுக்கு பஸ்சில்
செல்வார்களாம்.

அவர்கள்  எல்லாம்
ஒன்று சேர்ந்து
தனிப்பட்ட முறையில்
*மாவட்ட அமைச்சரை சந்தித்து*
இடமாற்றத்திற்கு
*தொடர் தடைபோட்டு*
*வந்திருக்கின்றனர்.*

புதிய அலுவலக்கட்டிடம் கட்ட
தங்களுடைய சொந்த இடம்
கிடைப்பதில் எல்ஐசிக்கு
கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால்
*காலியாக இருந்த*
*குறுகிய இடத்திலேயே*
*மூன்று மாடி யில்*
*கோட்ட அலுவலகம்*
*கட்டிமுடிக்க* திட்டமிட்டு
*கட்டிடப்பணிகளை*
எல்ஐசி நிர்வாகத்தினர்
*தொடங்கினார்களாம்.*

அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில்
அந்த அரசு அலுவலகமும்
பாதுகாப்பற்ற
அந்த கட்டிடத்தை விட்டு
வெளியேறி  வேறு
இடத்திற்கு  இடம்
மாறியிருக்கின்றனர்.

அதற்குப்பிறகு
*பாதுகாப்பு காரணங்களுக்காக*
*வலுவிழந்து பாழடைந்த*
*"மனோரமா கட்டிடம்"*
இடிக்கப்பட்டு
*தரைமட்டமாக்கப்பட்டதாம்.*

அதற்குப்பின்னர்
அந்த இடத்தில்
எல்ஐசி நிறுவனம்
அலுவலர் குடியிருப்பை
கட்டி முடித்ததாம்..

பெருமை மிகு
*”மனோரமா கட்டிடம்"*
இப்போது
*மறைந்தும் போய்விட்டது.*
*மறந்தும் போய்விட்டது.*

*--தொடரும்*

*பாளையங்கோட்டை பற்றி....*

*தகவல்-3*

பாளையங்கோட்டை
*வ.உ.சி திடல்.*

இது பாளையின்
மிகப்பெரிய அழகு..

*பழமைகளுள் ஒன்று.*
*பெருமைகளுள் ஒன்று.*

வெள்ளைக்காரர்கள்
நம்மை ஆண்ட காலத்தில்
இந்த திடல் இருக்கும் இடம்
*கர்சன் பிரபு பெயரால்*
*அழைக்கப்பட்டு வந்ததாம்.*

*திரு சுப்பிரமணியபிள்ளை அவர்கள்*
பாளையங்கோட்டை
நகர்மன்றத்தின் தலைவராக
செயல்பட்ட *காலத்தில்தான்*
*வ.உ.சி திடல்* என்று
*பெயர் மாற்றம்*
*செய்யப்பட்டதாம்..*

*10-1-1965* அன்று
*பாளையங்கோட்டை*
*நகராட்சியின்*
*நூற்றாண்டுவிழா*
கொண்டாடப்பட்டபோது
வ உ சி திடலின் மேற்குப்பக்கம்
கட்டப்பட்ட கேலரிகளும்
தெற்குப்பக்க கட்டிடம் ஒன்றும்
திறந்து வைக்கப்பட்டன.

அந்ந நேரத்தில்
கிழக்குப்பக்கமாக
மரக்கம்புகளால்
அமைக்கப்பட்டிருந்த
கேலரிகள் சரிந்து விழுந்தன.

பிற்காலத்தில்
கிழக்குப்பக்கத்திலும்
சிமெண்ட் காலரிகள்
கட்டி முடிக்கப்பட்டன.

நாற்றாண்டுவிழா
கொண்டாட்டத்தின்
ஓர் அங்கமாக
*இந்தியா - ஃப்ரான்ஸ்*
*ஆக்கி அணிகளுக்கிடையே*
*ஒரு போட்டி நடத்தப்பட்டது.*

வெற்றி வாகை சூடியது
இந்திய அணி.

*இரண்டு அணி வீரர்களுக்கும்*
*பத்தமடை பட்டுப்பாய்*
*நினைவுப்பரிசாக*
*வழங்கப்பட்டது.*

அப்போதைய
*நகர்மன்றத்தலைவர்*
*திரு மகராஜபிள்ளை.*

*சட்டமன்ற உறுப்பினர்*
*திருமதி இராஜாத்தி*
*குஞ்சிதபாதம் அம்மையார்.*

இந்த திடலில் 1960-70 களில்
"பால்-ஆப்பா நினைவு
ஆக்கி  டோர்ணமென்ட்"
என்ற பெயரில்
*அகில இந்திய அளவில்*
*ஆக்கி போட்டிகள்*
ஆண்டுதோறும்
*நடைபெற்றுவந்தன.*

பாளை நகர இளைஞர்களும்
மாணவச்செல்வங்களும்
ஆர்வத்துடனும்
பேரானந்தத்துடனும்
பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த திடலில் நடைபெற்ற
ஆக்கி போட்டியில்
*பெங்களூர் MEG அணி,*
சென்னையிலிருந்து
*தெற்குரயில்வே அணி,*
*திருச்சி பொன்மலை அணி,*
கோவில்பட்டி
*லஷ்மி மில் அணி,*
பாளையங்கோட்டை
*வெட்ரன்ஸ் அணி,*
*ஆர்னஸ்ட் அணி,*
சமாதானபுரத்தின்
*சாம்டான் ஸ்போர்ட்ஸ்*
கிளப் அணி,
*யாதவாலெவன் அணி,*
ஜோதிபுரம் அணி,
*சவேரியார்கல்லூரி அணி,*
என்று பல தலை சிறந்த
அணிகள் கலந்து கொண்டு
*விளையாடியிருக்கின்றன.*

மாணவர்கள் இடையில்
ஹாக்கி மீதான ஆர்வத்தை
நன்றாக வளர்த்ததில்
இந்த திடலுக்கு
பெரும்பங்குண்டு.

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில்
கலந்துகொண்டு
இந்திய அணியில்
விளையாடிய
வீரர்களில் சிலர்
இங்கு நடைபெற்ற
போட்டிகளில் விளையாடி
பாளை ரசிகர்களை
மகிழ்வித்திருக்கின்றனர்.

*ஒலிம்பியன்கள்*
*திரு பீட்டர்,*
*திரு முனீர் சேட்*
போன்றவர்கள்
*குறிப்பிடத்தக்கவர்கள்.*

போட்டி நடைபெறும்
காலங்களில்
ரசிகர்பட்டாளம்
அவர்களையே
சுற்றி சுற்றி வரும்.

உள்ளூர்  அணிகளில்
விளையாடி புகழ் பெற்ற
வீரர்கள் பலர் உண்டு.

ஒரே குடும்பத்தின்
மூன்று சகோதரர்களான
*பால் முஹம்மது,*
*ஷேக் முஹம்மது,*
*ரிஃபாய் முஹம்மது*
சிறந்த வீரர்களாக
மின்னினார்கள்.

மூவரில் கடைசி சகோதரர்
திரு ரிஃபாய் முஹம்மது
மிகச் சிறந்தவீரர்.

எனது வகுப்புத்தோழர்கள்
*திரு குணபாலன்,*
*திரு மனோகரன்*
போன்ற சிறந்தவீரர்கள்
சவேரியார் கல்லூரி அணியில்
இந்த மைதானத்தில்
விளையாடி புகழ்
பெற்றிருக்கிறார்கள்.

திருநெல்வேலி
மருத்துவக்கல்லூரியில்
மருத்துவம் படித்துவந்த
*தெற்கு பஜார்*
*திரு கு.கிருஷ்ணன்*
அவர்கள் சிறந்த
வீரராக பெயரெடுத்தார்.

இளைஞர்களின்
மனங்கவர்ந்த வீரர்களில்
*திரு பென்னி,திரு வசந்த்,*
*திரு குமாரவேல்,*
*திரு ஷேக்மதார்*
*கோல்கீப்பர் சேவியர்*
போன்ற வீரர்கள் உண்டு.

*SGKR* பஸ் கம்பெனி
குடும்பத்து இளவல்
*திரு செந்தில்* என்ற ஒரு
விளையாட்டுவீரரும்
இந்த வ.உ.சி  திடல்
உயர்த்திய பிள்ளைதான்.

*மாவட்ட ஆக்கி*
*பயிற்சியாளரான*
*பெரியவர் ஜார்ஜ்*
*இந்த திடலில்தான்*
*வீரர்களை பயிற்றுவித்தார்.*

பாளை நகர ரசிகர்களால்
போற்றப்படுபவராக
விளங்கினார்.

விளையாட்டிற்கென்று
அரசாங்கத்தால்
அண்ணா ஸ்டேடியம்
என்ற ஒரு திடல் தனியாக
அமைக்கப்பட்ட பிறகு
*வ உ சி திடலில் நடக்கும்*
*விளையாட்டு போட்டிகளும்*
*பிற பயிற்சிகளும்*
*மறைந்துவிட்டன.*

இந்தத்திடலின்
தெற்குப்பகுதியில்
ஓர்  உள்ளரங்கு
விளையாட்டுக்கட்டிடம்
புதிதாகக் கட்டப்பட்டு
வ உ சி திடலுக்கு
பெருமை சேர்த்திருக்கிறது.

ஒவ்வொருவருடமும்
*சுதந்திர நாளிலும்*
*குடியரசுநாளிலும்*
*காவலர்* மற்றும்
*தேசிய மாணவர்படை* யின்
*அணிவகுப்பு* தவறாமல்
*இந்த மைதானத்தில்*
*நடைபெறுவது வழக்கம்.*

இரண்டு முறை
சவேரியார் கல்லூரி
தேசிய மாணவர்படையின்
சீனியர் அண்டர் ஆபீசர்
என்ற நிலையில் நானே
தேசிய மாணவர் படையின்
அணிவகுப்பை முன்னின்று
வழிநடத்தியிருக்கிறேன்.

சில பல நேரங்களில்
நகர்மன்ற நிர்வாகம்
பல எதிர்ப்புக்களையும்
மீறி *விளையாட்டுக்கு*
*சற்றும் தொடர்பில்லாத*
*பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு*
*அனுமதி கொடுத்த*
*அவலமும் நடந்ததுண்டு.*

1970 களின் துவக்கத்தில்
இந்த திடலில்
திரு கான் அப்துல்
கபார்கான் மற்றும்
நடிகர் திலகம் சிவாஜி
பங்குகொண்ட
பொதுக்கூட்டங்கள்
நடந்திருக்கின்றன.

அவர்கள் கலந்துகொண்ட
பொதுக் கூட்டத்திற்கு
நான் சென்றது இன்றும்
என் நினைவில்
பசுமையாக உள்ளது.

ஒன்றிரண்டு முறை
*சர்க்கஸ் கூட நடத்த*
*அனுமதித்தார்கள்.*

இதுபோன்ற
பல நிகழ்வுகளால்
*இந்த திடல் மிகவும்*
*சேதப்பட்டுப்போனது.*

பல  பெருமைகளை
தன்னகத்தே வைத்துள்ள
இந்த வ உ சி திடலானது
*இன்று நடைப்பயிற்சி*
*செய்பவர்களுக்கு*
*நல்லதொரு இடம்.*

*குழந்தைகளின்*
*பொழுது போக்கிற்கும்*
*நல்லதொரு களமாக*
*திகழ்ந்து வருகிறது.*

திடலின் சுற்றுச் சுவர்களை
ஒட்டிய பகுதிகளில்
தள்ளு வண்டிகள் மூலம்
நடைபெறும்
தின் பண்டங்களின்
விற்பனை நன்றாகவே
நடந்துகொண்டிருக்கிறது.

*பாளை மக்களின்*
*நெஞ்சில் நீங்காத*
*இடம்பெற்றுள்ள*
*உயிரோட்டமுள்ள*
*ஓர்  அங்கம் தான்*
*வ.உ.சி திடல்.*

இந்த திடலை
*வளர்க்காவிட்டாலும்*
*பரவாயில்லை.*

அதனை சிதைக்காமல்
*பாதுகாக்கவேண்டிய*
*பெரும் பொறுப்பு*
*ஒவ்வொரு*
*பாளையங்கோட்டை*
*இளைஞனுக்கும்*
*நிறையவே உண்டு.*

*---தொடரும்*




*தகவல் -5*

திருநெல்வேலியும்
பாளையங்கோட்டையும்
*இரட்டை நகரங்கள்* என்றாலும்
இரண்டு ஊர்களுக்குமிடையே
*நிறைய வேறுபாடுகள்* உண்டு.

*திருநெல்வேலி* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *கருப்பந்துறை..*

*பாளையங்கோட்டை* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *வெள்ளக்கோயில்.*

*திருநெல்வேலி* யில்
1970க்கு முன்னர்
குடிநீருக்காக
தாமிரபரணி ஆற்றில்
*ஓடும் நீரை* பம்ப் செய்து
குறுக்குத்துறை அருகில்
ஒரு இடத்தில் சேமித்துவைத்து
நகர் முழுதும் *விநியோகம்*
*செய்துவந்தார்கள்.*

*பாளையங்கோட்டை* யில்
நகர மக்களின்
குடிநீர் தேவைக்காக
அருகில் உள்ள
மணப்படைவீடுஎன்ற ஊரில்
*ஆழ்துளைக் கிணறு* போட்டு
தண்ணீரை பம்ப் செய்து
பெரிய குழாய்கள் மூலம்
பாளையங்கோட்டை
சமாதானபுரத்தில் இருக்கும்
வாட்டர்டாங்கில் ஏற்றி
அதிலிருந்து *விநியோகம்*
*செய்தார்கள்..*

*திருநெல்வேலி* யில் தான்
*நிறைய திரையரங்குகள்*
அமைக்கப்பட்டிருந்தன.

1970 வரை *பாளையில்*
*அசோக் டாக்கீஸ்* மட்டுமே.

*திருநெல்வேலி* யில்
*இந்துக்கல்லூரி* மட்டுமே.
1967க்குப்பிறகு தான்
*ராணி அண்ணா*
*மகளிர் கல்லூரி.*

*பாளையங்கோட்டை* யில்
*சவேரியார் கல்லூரி,*
*யோவான் கல்லூரி,*
*சாரா டக்கர் கல்லூரி,*
*அரசு மருத்துவக்கல்லூரி*
என பல கல்விக்கூடங்கள்.

*சதக்கத்துல்லா கல்லூரி,*
*அரசு சித்த மருத்துவக்கல்லூரி,*
*அரசு பொறியியற்கல்லூரி,*
*சாரதா கல்லூரி,*
*அரசு சட்டக்கல்லூரி,*
என பிற்பாடு
பல கல்வி  நிறுவனங்கள் வந்தன.

*பள்ளிப்படிப்பில்*
பல முறை *மாநிலள அளவில்*
*முதலிடம்* பெற்று பெருமை சேர்த்த
மாணவச்செல்வங்கள்
*பாளையங்கோட்டை*
*பள்ளிகளிலிருந்துதான்.*

இதனால் தானோ என்னவோ
*பாளையங்கோட்டை*
*Oxford of South* என்று
*புகழ் பெற்றது.*

பாளையங்கோட்டை
கல்வி நிலையங்களால்
சூழப் பட்டதால்
*தெற்கு வீதியில் மட்டும்*
அந்தோணிஸ்கூல்
சர்ச்சிலிருந்து தொடங்கி
ராமர் கோவில்வரை
*நூறுக்கும் கூடுதலான*
*தையற்கடைகள் இருந்தன.*

இப்போது அவைகள்
குறைந்துவிட்டன.

இரண்டு நகரங்களுக்குமிடையே
*கலாச்சார வேறுபாடுகளும்*
*நிறையவே உண்டு.*

*திருநெல்வேலி ஆசாரம்*
என்று  தங்களை  உயர்த்தியும்
பாளையங்கோட்டைக்காரர்களை
மட்டந்தட்டியும் பேசி
*திருநெல்வேலிக்காரர்கள்*
*மகிழ்ச்சியடைவார்கள்.*

முதலில் மாவட்ட
*அரசு மருத்துவமனை*
பாளைப்பகுதியான
*வண்ணாரப்பேட்டை*
*சாலைத்தெரு* வில்
செயல்பட்டு வந்தது.

மாவட்ட புதிய மருத்துவமனை
ஹைகிரவுண்டில்
செயல்படத் தொடங்கியதும்
*வண்ணாரப்பேட்டை மருத்துவமனை*
*பழைய ஆசுபத்திரி* யாக மாறியது.

*மனோன்மணியம் சுந்தரனார்*
*பல்கலைக்கழகம்*
நிறுவ முடிவுசெய்த போது,
பல்கலைக்கழகத்தை
பாளையில் அமைப்பதற்காக
*சீவலப்பேரி ரோட்டில்*
இடம் எல்லாம் பார்த்து
*கையகப்படுத்தியிருந்தனர்.*

அடுத்து ஏற்பட்ட
*ஆட்சி மாற்றத்தினால்*
*அரசியல் காரணங்களுக்காக*
*நெல்லைப்பகுதிக்கு* புதிய
பல்கலைக்கழகம்
*கடத்திச் செல்லப்பட்டது.*

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
பகுதிகளில்
*தனியார் மருத்துவமனை*
என்று  தனியார் ஒருவரால்
முதலில் அமைக்கப்பட்டது
*திரு வேலாயுதம்பிள்ளை* அவர்களின்
*மருத்துவமனைதான்.*

இதற்குப்பிறகே மற்ற
மருந்துவமனைகள் வந்தன.

*கண் மருத்துவத்திற்கென்று*
*டாக்டர் போத்திலிங்கம்*
*மருத்துவமனை* தான்
பாளையங்கோட்டையில்
முதன் முதலில் வந்தது.

*திருநெல்வேலியில்*
*ENT க்கு டாக்டர் முத்தையாவும்*
*பல் மருத்துவத்திற்கு*
*டாக்டர் CHEN* என்ற
சைனாக்காரரும்
*சிறந்த நிபுணர்கள்.*

பாளையங்கோட்டை
முருகன் குறிச்சியின்
*ஊசிக் கோபுரம்*
பாளையங்கோட்டையின்
*ஓர் அடையாளச்சின்னம்.*

அந்தக் காலகட்டத்தில்
நூற்றாண்டு மண்டபம்
அருகிலிருந்த
*எட்வர்ட் அன்கோ*
புகழ்பெற்ற ஒரு கடை.

*நூற்றாண்டு மண்டபம் அருகே*
1960 களில் இந்திய முறை
*சித்த மருத்துவ கல்லூரி*
*மற்றும் மருத்துவமனை*
தொடங்கப் பட்டது.

*நூற்றாண்டு மண்டபம்,*
*நேருஜி சிறுவர் அரங்கம்,*
திருச்செந்தூர் சாலையிலிருந்த
*பால் ஆஸ்பத்திரி* போன்றவை
பாளையின் *பெருமைகளில்*
*முக்கியமானவை.*

சீவலப்பேரி சாலையில்
சாந்திநகர் எதிரில்
*பேராசிரியர் ராஜேந்திரன்*
அவர்களின் *பாம்புப்பண்ணை*
அமைந்திருந்தது.

*இப்போது* அங்கு
*அந்த பண்ணை இல்லை*
என்றாலும் அதனை
நினைக்கும்போது
வயிற்றில்
புளியைக்கரைக்கத்தான்
செய்கிறது.

ஒருமுறை
*தமிழ்நாட்டில்*
*சிறுசேமிப்பில்*
*நெல்லை* மாவட்டம்
*முதலிடம் பெற்றது.*

அதற்குக்கிடைத்த
*ஊக்கப்பணத்தில்*
பாளை சாந்திநகரில்
*திம்மராஜபுரம் விலக்கருகில்*
*மணிக்கூண்டு* ஒன்று
நிறுவப்பட்டது.

இப்போது நேரத்தினை
காட்ட *கடிகாரம்* ஏதும்
*இல்லாவிட்டாலும்*
அந்த மணிக்கூண்டு
*பாளையின் அடையாளமாகவே*
திகழ்கிறது.

இப்படி *பழம் பெருமைகளை*
*எப்போது நினைத்துப்பார்த்தாலும்*
*மனம் துள்ளல் போடுகிறது.*

*--தொடரும்*

#பாளையங்கோட்டை பற்றி...

தகவல்-6

அந்தக்கால
பாளையங்கோட்டை..

பாளையங்கோட்டை
வடக்குப்பகுதியில்
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனை பிரபலம் என்றால்
தென்பகுதியில்
மதர் ஆசுபத்திரி
மிகவும் பிரபலம்.

1960 வரை
குழந்தைகளின் பிறப்பு
ஆயாக்களின் தயவிலும்
வீட்டுப் பெரியவர்களின்
அனுபவங்களின் மூலமும்
அவரவர் இல்லங்களில்
வைத்துதான் நடந்தது.

1960 லிருந்து
விஞ்ஞான முன்னேற்றத்தால்
மகப்பேறு மருத்துவமனைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ப்பகுதிகளில்
முளைக்கத் துவங்கின.

தென்பகுதி மதர் ஆசுபத்திரி
முழுக்கமுழுக்க
இயேசு திருச்சபையின்
வெள்ளைக்கார
அன்னையர்களால்
இலவச சேவையாக
நடத்தப்பட்டுவந்தது.

மகப்பேறுகள் வீட்டிலிருந்து
மருத்துவமனைகளுக்கு
மாறத்தொடங்கின.

மத வேறுபாடின்றி
அனைத்து மதத்துக் குடும்பங்களும்
அந்த வசதியைப்பயன்படுத்த
தொடங்கினர்.

எனக்கு நன்கு தெரிந்த
ஒன்றிரண்டு குடும்பங்களில்
பிரசவம் பார்த்த
வெள்ளைக்கார அன்னையர்கள்
நினைவைப்போற்றும் வண்ணம்
பெண் குழந்தை பிறந்தால்
துரைச்சி என்றும் ஆண்குழந்தை
பிறந்தால் துரைராஜ் எனவும்
தாங்களே மனமுவந்து
பெயரிட்டு நன்றி பாராட்டினர்.

பாளையங்கோட்டை
தெற்குப்பகுதியில்
பல கல்விமனைகளும்
மாணவர் தங்கும் விடுதிகளும்
அமையப்பெற்றிருந்தன.

தூய அந்தோணியார் பள்ளி,
செவன் டாலர்ஸ் பள்ளி,
கிறிஸ்துராஜா பள்ளி,
தூய யோவான் உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளி,
லயோலா காண்வெண்ட்,
இக்னேஷியஸ் காண்வெண்ட்,
STC உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் கல்லூரி,
தூய யோவான் கல்லூரி,
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி,
சேவியர் ஆஸ்டல்,
பிரிட்டோ ஆஸ்டல்,
தூய இருதய ஆஸ்டல்,
செல்வின் ஆஸ்டல் ,
என மாணவ மாணவியர்களால்
தென்பகுதி மிகவும்
கலகலப்பாகக்காணப்பட்டது.

பெருமாள் புரம் STC கல்லூரி
முருகன்குறிச்சி கதீட்ரல்பள்ளி,
மேரி சார்ஜண்ட் பள்ளி,
பார்வையற்றோர்பள்ளி,
பேசமுடியாதவர் பள்ளி என்றும்
பல வகை கல்விமனைகள்.

இதன் பொருட்டு
பாளையங்கோட்டை ஒரு
கல்வி ஆலயமாக திகழ்ந்து
பெருமை பெற்றது.

திரு வை.கோபால்சாமி,
திரு வலம்புரிஜாண்,
திரு பீட்டர் அல்போன்ஸ்
திரு தளவாய் சுந்தரம்,
திரு தங்கராஜ் பாண்டியன்,
முன்னாள் அமைச்சர்கள்
திரு திருநாவுக்கரசர்,
திரு முத்துசாமி போன்ற
புகழ்பெற்ற பல
அரசியல் கட்சித்தலைவர்களையும்
உருவாக்கி உலகுக்கு அளித்தது
தூய சவேரியார் கல்லூரி.

உச்சமன்ற நீதிபதியாக
உழைப்பால் உயர்ந்த
உச்சநீதிமன்ற  நீதியரசர்
திரு ரத்தினவேல்பாண்டியன் ஐயா
அவர்களை வளர்த்து மகிழ்ந்தது
சவேரியார் கல்லூரியே.

ஆலடி அருணா போன்றோரை
யோவான் கல்லூரி உயர்த்தியது.

இன்னும் எத்தனையோ
விஞ்ஞானிகளையும்
IAS,IPS அலுவலர்களையும்
பாளையங்கோட்டையின்
கல்வி ஆலயங்கள்
உருவாக்கியுள்ளன.

பாளையங்கோட்டை
மத்திய சிறைச்சாலையும்
பெரியதொரு வளாகத்தில்
குலவணிகர புரத்திற்கும்
பெருமாள்புரத்துற்கும்
நடுவே அமைந்துள்ளது.

இதுகூட  ஒரு வகையில்
குற்றவாளிகளைத்திருத்தும்
நல்ல தொரு பள்ளிக்கூடம்தானே..

பாளை வடக்குப்பகுதியில்
காந்தி தினசரி சந்தைக்கு கிழக்கு,
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனைக்கு மேற்கு,
திருச்செந்தூர் ரோட்டிற்கு தெற்கு,
மனகாவலம்பிள்ளை மருத்துவமனை
ரோட்டிற்கு வடக்கு என்பதை
தனது எல்கையாகக்கொண்ட
"ஜவஹர் திடல் " என்ற
ஒரு பெரிய திடல் உள்ளது

நல்ல பள்ளத்தில்
இந்த திடல் இருந்தது.
சிறு வயதில் அதாவது 1960 களில்
இங்கு ஹாக்கி கூட
விளையாண்டிருக்கிறேன்.

இப்போது பள்ளம் நிரப்பப்பட்டு
ரோடு உயரத்தில்
திடல் உள்ளது.

1960-70 களில்
அரசியல் பொதுக்கூட்டங்கள்
இங்கு தான் நடைபெறும்.

அண்ணா, மொரார்ஜி, கலைஞர்,
எம்ஜியார், சம்பத், நம்பூதிரிபாட் டில்
தொடங்கி தீப்பொறி ஆறுமுகம் வரை
பலர் பேசிய மைதானம் இது.

இன்றும் அரசியல் கூட்டங்கள்
உண்ணாவிரதப போரட்டங்கள்
என்று பல நிகழ்ச்சிகள்
நடைபெற்றுக்கொண்டுதான்
இருக்கின்றன.

லாரி வேன் என நிறுத்தப்பட்டு
மூக்கை மூடவைக்கும்
மூத்திரக்காடாக
சீரழிந்த நிலையில் இருக்கிறது.

வடநாட்டு வீர்ர்களான
கிங்காங், தாராசிங் போன்றோர்
பங்கெடுத்த பல
மல்யுத்தப்போட்டிகள்
இந்த திடலில்
நடைபெற்றிருக்கின்றன.

புகழ்பெற்ற தசரா பண்டிகை
கொண்டாட்டத்தின்போது
ராட்சச ராட்டினம், குடை ராட்டினம்,
மரணக்கிணறு, நாக கன்னிகை,
என பல பொழுதுபோக்கு
கொண்டாட்டங்கள்
இந்த திடலில் தான்
நடைபெற்றிருக்கின்றன.

இந்த திடல் முழுதும்
பல வருடங்களுக்கு முன்
ஒரு தனியாருக்குத்தான்
சொந்தமாக இருந்துள்ளது.

உரிமையாளரான அம்மையார்
காந்திமார்கெட்டிலிருந்து
சமாதானபுரம் வரை
நீண்டிருந்த மொத்த இடத்தையும்
பாளை நகராட்சிக்கு
சில நிபந்தனைகளோடு
எழுதி வைத்தாராம்.

அந்த இடத்தில்
மருத்துவமனை,
பள்ளிக்கூடம்,
விளையாட்டுத்திடல்போன்று
பொதுமக்களுக்கு
பயன் தரக்கூடியவைகளை
ஏற்படத்திக்கொள்ளலாம்,
வேறு எந்த கட்டிடங்களும்
கட்டக்கூடாது என்பது தான்
போடப்பட்ட நிபந்தனைகள்.

வாட்டர்டாங்க் கட்டப்பட்டது.
மருத்துவமனை கட்டப்பட்டது.
முன்னாள் ராணுவவீரர்கள்
நடத்திய பஸ் கம்பெனிக்கு
இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த தகவல்களை
வயதில் பெரியவர்கள்
பேசிக்கொண்டிருந்போது
ஒட்டுக்கேட்டிருக்கிறேன்.

தசராக் கொண்டாட்டங்களின்போது
தெருச்சண்டை,
வடபகுதி தென்பகுதிச்சண்டை
ஜாதிச் சண்டை என்று
பேச்சில் தொடங்கி
அடிதடியில் வளர்ந்து
கொலை வரை கூட சென்ற
அசம்பாவித சம்பவங்கள்
நடைபெற்றிருக்கின்றன.

தலை நிமிர்த்து
பெருமைப்படக்கூடிய நிகழ்வுகள்
பல நடந்திருந்தாலும்
தலகுனிந்து  வருந்தவேண்டிய
மேற் கூறிய நிகழ்வுகளை
மனதிலிருந்து அகற்றவேண்டும்.

பெருமைப்படக்கூடிய ஊர்தான்
#எங்கள்_பாளையங்கோட்டை.
================#பாளையங்கோட்டை... பற்றி

தகவல்-1

முன்பு தனி நகராட்சியாக செயல்பட்டு
வந்த பாளையங்கோட்டை இப்போது
திருநெல்வேலி மாநகராட்சியின்
ஓர் அங்கமாக இருக்கிறது.

இங்கு தான்
கல்விநிறுவனங்களும்
அரசு அலுவலகங்களும்
அமையப்பெற்றுள்ளன.

தாமிரபரணி ஆற்றுக்கு
மேற்குப்பக்கம் திருநெல்வேலி.

கிழக்குப்பக்கம்
பாளையங்கோட்டையின்
பகுதிகளான கொக்கிரகுளமும்
வண்ணார்பேட்டையும்.

மூன்று கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவர்களுக்கு.

இரண்டு கலை அறிவியல்
கல்லூரிகள் மாணவிகளுக்கு.

அரசு மருத்துவக்கல்லூரி,
அரசு பொறியியல் கல்லூரி,
அரசு சட்டக்கல்லூரி,
அரசு சித்த மருத்துவக்கல்லூரி,
நீதிமன்றங்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மாவட்ட காவல்துறை அலுவலகம்
என்று இவை எல்லாம் உள்ளது  பாளையங்கோட்டையில் தான்.

மத்திய சிறைச்சாலை கூட
பாளையங்கோட்டையில் தான்.

அந்தக்காலத்திலேயே
நிறுவப்பட்ட "சேட்டிலைட் "
நகரப் பகுதிகள்தான்
இன்றைய
பெருமாள்புரமும்
மகராஜநகரும்.

மதுரையில் SS காலனி,
கோவையில் RS புரம் போலத்தான்
பாளையில் இவையிரண்டும்.

திருநெல்வேலியையும்
பாளையங்கோட்டையையும்
இணைப்பது
சுலோச்சன முதலியார் பாலம்.

தாமிரபரணி ஆற்றை அடுத்து
மாவட்ட அறிவியல் மையத்தை
ஒட்டினாற்போல்
சிறிய ஓடை ஒன்று உள்ளது.

இந்த ஓடை அருகிலேயே
ஓடும் ஆற்றில் போய்
கலந்துவிடும்.

1950 களுக்கு முன்பு பிறந்த
பெரியவர்கள் இந்த ஓடைபற்றி
நன்கு அறிவார்கள்.

இந்த ஓடையின் பெயர்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை."

இந்த ஓடையில் ஒரு நாள்
நீர் பெருக்கெடுத்துவருகிறது.

பலமாக வீசிய காற்றில்
பலா மரத்திலிருந்து
இந்த ஓடையில் விழுந்த
பலாப்பழம் ஒன்று நீரினால்
வேகமாக அடித்து வரப்பட்டு
மிதந்து வருகிறது.

கையில் கைக்குழந்தையுடன்
கரையில் நின்றுகொண்டிருந்த
பெண் ஒருத்தி
இதைப்பார்க்கிறாள்.

பலாப்பழத்திற்கு
ஆசைப்படுகிறாள்.

கையிலுள்ள குழத்தையை
கரையோரத்தில் வைத்துவிட்டு
பலாப்பழத்தை எடுக்க
நீரில் பாய்கிறாள்..

பழத்தை பிடித்து கரைக்கு
கொண்டு வருகிறாள்.

இதற்கிடையில் கரையில்
கிடத்தப்பட்ட குழந்தையை
நீரின் வேகம் இழுத்துக்கொண்டு
சென்று விடுகிறது.

பழத்தைப்பிடித்து கரைசேர்த்த
தாயால்  குழந்தையைக்காப்பாற்ற
இயலவில்லை..

இந்த ஓடையைத்தான்
"பிள்ளையைப்போட்டு
பலாப்பழம் எடுத்த ஓடை"
என்று கூறி வந்தனர்.

இப்போதும்
இந்த ஓடை உள்ளது.

தண்ணீர் வருவதுமாதிரி
தெரியவில்லை..

காரணப்பெயரும்
இப்போதைய மக்களுக்கு
தெரியாமல் போய்விட்டது...

--தொடரும்..

*பாளையங்கோட்டை பற்றி.....*

*தகவல்-2*

*அந்தக்காலத்தில்*
*பாளையங்கோட்டையில்*
*"மனோரமா பில்டிங்"* என்பது
பெயர் பெற்ற
*ஒரு பெருங்கட்டிடம்.*

*வ.உ.சி மைதானத்திற்கு*
*தெற்குபக்கம் .....*
இப்போது
எல்ஐசி கிளை அலுவலகம்,
கோட்ட அலுவலகம் மற்றும்
அலுவலர் குடியிருப்பு இருக்கும்
அந்த பெரிய மனையில்
கம்பீரமாக காட்சியளித்த
இரண்டடுக்கு கட்டிடமாக
காண்போர் *கண்கவர்*
*மாளிகையாக* *திகழ்ந்ததுதான்*
*"மனோரமா பில்டிங்"*

*மேற்குப்பக்கம்*
*திருவனந்தபுரம் சாலை* யும்
*கிழக்குப்பக்கம்*
*இக்னேஷியஸ்* *பள்ளி* யும்
இதன் வளாகத்தின்
*எல்லைகளாக இருந்தன.*

"மனோரா பில்டிங்" கின்
பரந்து விரிந்த *வளாகத்தில்*
*வேப்பமரங்களும்*
*புளியமரங்களும்*
நிறைந்திருந்து
*நிழல் கொடுத்துவந்தன.*

அந்த கட்டிடத்தை
வடிவமைத்து படைத்தவர்கள்
*திரு அப்பாசாமிபிள்ளை*
*-திருமதி மனோரமா*
*தம்பதியர்.*

*திருமதி மனோரமா அம்மையார்*
*பெயரைத்தான் இந்த கட்டிடம்*
*தாங்கிநின்றது.*

ஒரு காலகட்டத்தில்
இந்த சொத்தை
*இத் தம்பதியர்*
திருநெல்வேலியிலிருந்து
இயங்கிவந்த
*ஒரு தனியார்*
*ஆயுள் இன்ஷ்யூரன்ஸ்*
*நிறுவனத்திற்கு*
*நன்கொடையாக*
*வழங்கிவிட்டார்களாம்.*

*1956 ஜனவரியில்*
அவசரச்சட்டம்மூலம்
*ஆயுள் காப்பீட்டுத் தொழில்*
*நாட்டுடமையாக்கப்பட்டவுடன்*
*இந்த சொத்து* முழுவதும்
அப்படியே
*எல்ஐசி நிறுவனத்திற்கு*
*கை மாறிப் போனதாம்.*

எல்ஐசி கைக்கு வந்த
சில வருடங்களுக்குப் பின்னர்
எல்ஐசி நிறுவனத்தார்
*மேற்கு பகுதியில்* *தங்களுக்கு*
*கிளை* *அலுவலகக்கட்டிடம்*
கட்டியுள்ளனர்.

கிழக்குப்பகுதியில்
*"மனோரமா பில்டிங்"*
*இரண்டு மாடி கட்டிடமாக*
*ஒரு மாளிகை போல்*
*இருந்திருக்கிறது..*

*1960 களில் எல்லாம்*
*அந்த கட்டிடத்தில் தான்*
*மாவட்ட மைய நூலகம்*
*இயங்கி வந்திருக்கிறது.*

*மாவட்ட மைய நூலகம்*
தூய சவேரியார் கல்லூரிக்கு
எதிரில்  *இடம் மாறிய பிறகு*
"மனோரமா" கட்டிடத்தை
*மாவட்ட கல்வி அலுவலர்*
*அலுவலகத்திற்கு*
*வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.*

அரசுத்துறை அலுவலகம்
*மிகக்குறைந்த அளவு*
தொகையைத்தான்
*வாடகை* யாக கொடுத்து
வந்திருக்கின்றது.

அதையும் மாதந்தோறும்
*ஒழுங்காக*
*கொடுப்பதில்லை* யாம்.

*கட்டிடமும்*
*பராமரிப்பு இல்லாததால்*
*வலுவிழந்த நிலையில்*
*இருந்திருக்கிறது.*

இதை காரணமாகக்காட்டி
பல வருடங்களுக்குப்பிறகு
எல்ஐசி நிர்வாகம்
கட்டிடத்தை தங்களிடம்
திருப்பி ஒப்படைக்கும்படி
கல்வி அலுவலர்
அலுவலகத்தை
கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்கள் இடம் மாற
எந்த முயற்சியும்
எடுக்கவில்லையாம்.

எல்ஐசி நிர்வாகம்
வழக்குத்தொடுத்ததாம்.

வாதாடிய வழக்குரைஞர்
அலுவலகக் கட்டிடம்
பாதுகாப்பற்ற நிலையில்
உள்ளதாகவும்,
வாடகை கூட மிகக்குறைவாக
கொடுப்பதாகவும்,
அதைக்கூட  ஒழுங்காகக்
கொடுப்பதில்லை என்றும்
வாதாடினாராம்.

இதைக்கேட்ட நீதிமன்றம்
*வாடகையை ஒழுங்காகக்*
*கொடுக்கவேண்டும் என்று*
*தீர்ப்பளித்து வழக்கினை*
*முடித்துவைத்ததாம்.*

அதற்குப் பின்னரும்
மாத வாடகப்பணத்தை
ஆண்டுக்கொருமுறை
கொடுப்பதையே வழக்கமாகக்
தொடர்ந்து கொண்டிருந்தனராம்.

இந்த நேரத்தில்
எல்ஐசி நிறுவனத்தின்
கோட்ட அலுவலகம்
வாடகைக்கட்டிடத்தில்
வண்ணார்பேட்டையில்
இயங்கிவந்திருக்கிறது.

எனவே
*எல்ஐசி நிறுவனம்*
*கோட்ட அலுவலகத்திற்கு*
சொந்த *கட்டிடம் கட்ட*
*இடம் வேண்டும் என*
மாவட்ட கல்வி அலுவலர்
அலுவலகத்திற்கு *ஓலை*
*அனுப்பியிருக்கிறார்கள்.*

கல்வி அலுவலர்
அலுவலக நிர்வாகிகள்
வேறு இடம் பார்க்க
ஏற்பாடு செய்து
வந்திருக்கின்றனர்.

வேறு ஊர்களில் வேலை
பார்க்கும் சில அரசு
ஊழியர்கள் தங்கள்
இருசக்கர வாகனங்களை
இந்த அலுவலக வளாகத்தினுள்
நிறுத்திவிட்டு பாளை
பஸ் நிலையத்திலிருந்து
வேறு ஊர்களுக்கு பஸ்சில்
செல்வார்களாம்.

அவர்கள்  எல்லாம்
ஒன்று சேர்ந்து
தனிப்பட்ட முறையில்
*மாவட்ட அமைச்சரை சந்தித்து*
இடமாற்றத்திற்கு
*தொடர் தடைபோட்டு*
*வந்திருக்கின்றனர்.*

புதிய அலுவலக்கட்டிடம் கட்ட
தங்களுடைய சொந்த இடம்
கிடைப்பதில் எல்ஐசிக்கு
கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால்
*காலியாக இருந்த*
*குறுகிய இடத்திலேயே*
*மூன்று மாடி யில்*
*கோட்ட அலுவலகம்*
*கட்டிமுடிக்க* திட்டமிட்டு
*கட்டிடப்பணிகளை*
எல்ஐசி நிர்வாகத்தினர்
*தொடங்கினார்களாம்.*

அதன் பிறகு
ஒரு கால கட்டத்தில்
அந்த அரசு அலுவலகமும்
பாதுகாப்பற்ற
அந்த கட்டிடத்தை விட்டு
வெளியேறி  வேறு
இடத்திற்கு  இடம்
மாறியிருக்கின்றனர்.

அதற்குப்பிறகு
*பாதுகாப்பு காரணங்களுக்காக*
*வலுவிழந்து பாழடைந்த*
*"மனோரமா கட்டிடம்"*
இடிக்கப்பட்டு
*தரைமட்டமாக்கப்பட்டதாம்.*

அதற்குப்பின்னர்
அந்த இடத்தில்
எல்ஐசி நிறுவனம்
அலுவலர் குடியிருப்பை
கட்டி முடித்ததாம்..

பெருமை மிகு
*”மனோரமா கட்டிடம்"*
இப்போது
*மறைந்தும் போய்விட்டது.*
*மறந்தும் போய்விட்டது.*

*--தொடரும்*

*பாளையங்கோட்டை பற்றி....*

*தகவல்-3*

பாளையங்கோட்டை
*வ.உ.சி திடல்.*

இது பாளையின்
மிகப்பெரிய அழகு..

*பழமைகளுள் ஒன்று.*
*பெருமைகளுள் ஒன்று.*

வெள்ளைக்காரர்கள்
நம்மை ஆண்ட காலத்தில்
இந்த திடல் இருக்கும் இடம்
*கர்சன் பிரபு பெயரால்*
*அழைக்கப்பட்டு வந்ததாம்.*

*திரு சுப்பிரமணியபிள்ளை அவர்கள்*
பாளையங்கோட்டை
நகர்மன்றத்தின் தலைவராக
செயல்பட்ட *காலத்தில்தான்*
*வ.உ.சி திடல்* என்று
*பெயர் மாற்றம்*
*செய்யப்பட்டதாம்..*

*10-1-1965* அன்று
*பாளையங்கோட்டை*
*நகராட்சியின்*
*நூற்றாண்டுவிழா*
கொண்டாடப்பட்டபோது
வ உ சி திடலின் மேற்குப்பக்கம்
கட்டப்பட்ட கேலரிகளும்
தெற்குப்பக்க கட்டிடம் ஒன்றும்
திறந்து வைக்கப்பட்டன.

அந்ந நேரத்தில்
கிழக்குப்பக்கமாக
மரக்கம்புகளால்
அமைக்கப்பட்டிருந்த
கேலரிகள் சரிந்து விழுந்தன.

பிற்காலத்தில்
கிழக்குப்பக்கத்திலும்
சிமெண்ட் காலரிகள்
கட்டி முடிக்கப்பட்டன.

நாற்றாண்டுவிழா
கொண்டாட்டத்தின்
ஓர் அங்கமாக
*இந்தியா - ஃப்ரான்ஸ்*
*ஆக்கி அணிகளுக்கிடையே*
*ஒரு போட்டி நடத்தப்பட்டது.*

வெற்றி வாகை சூடியது
இந்திய அணி.

*இரண்டு அணி வீரர்களுக்கும்*
*பத்தமடை பட்டுப்பாய்*
*நினைவுப்பரிசாக*
*வழங்கப்பட்டது.*

அப்போதைய
*நகர்மன்றத்தலைவர்*
*திரு மகராஜபிள்ளை.*

*சட்டமன்ற உறுப்பினர்*
*திருமதி இராஜாத்தி*
*குஞ்சிதபாதம் அம்மையார்.*

இந்த திடலில் 1960-70 களில்
"பால்-ஆப்பா நினைவு
ஆக்கி  டோர்ணமென்ட்"
என்ற பெயரில்
*அகில இந்திய அளவில்*
*ஆக்கி போட்டிகள்*
ஆண்டுதோறும்
*நடைபெற்றுவந்தன.*

பாளை நகர இளைஞர்களும்
மாணவச்செல்வங்களும்
ஆர்வத்துடனும்
பேரானந்தத்துடனும்
பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த திடலில் நடைபெற்ற
ஆக்கி போட்டியில்
*பெங்களூர் MEG அணி,*
சென்னையிலிருந்து
*தெற்குரயில்வே அணி,*
*திருச்சி பொன்மலை அணி,*
கோவில்பட்டி
*லஷ்மி மில் அணி,*
பாளையங்கோட்டை
*வெட்ரன்ஸ் அணி,*
*ஆர்னஸ்ட் அணி,*
சமாதானபுரத்தின்
*சாம்டான் ஸ்போர்ட்ஸ்*
கிளப் அணி,
*யாதவாலெவன் அணி,*
ஜோதிபுரம் அணி,
*சவேரியார்கல்லூரி அணி,*
என்று பல தலை சிறந்த
அணிகள் கலந்து கொண்டு
*விளையாடியிருக்கின்றன.*

மாணவர்கள் இடையில்
ஹாக்கி மீதான ஆர்வத்தை
நன்றாக வளர்த்ததில்
இந்த திடலுக்கு
பெரும்பங்குண்டு.

ஒலிம்பிக் ஆக்கி போட்டியில்
கலந்துகொண்டு
இந்திய அணியில்
விளையாடிய
வீரர்களில் சிலர்
இங்கு நடைபெற்ற
போட்டிகளில் விளையாடி
பாளை ரசிகர்களை
மகிழ்வித்திருக்கின்றனர்.

*ஒலிம்பியன்கள்*
*திரு பீட்டர்,*
*திரு முனீர் சேட்*
போன்றவர்கள்
*குறிப்பிடத்தக்கவர்கள்.*

போட்டி நடைபெறும்
காலங்களில்
ரசிகர்பட்டாளம்
அவர்களையே
சுற்றி சுற்றி வரும்.

உள்ளூர்  அணிகளில்
விளையாடி புகழ் பெற்ற
வீரர்கள் பலர் உண்டு.

ஒரே குடும்பத்தின்
மூன்று சகோதரர்களான
*பால் முஹம்மது,*
*ஷேக் முஹம்மது,*
*ரிஃபாய் முஹம்மது*
சிறந்த வீரர்களாக
மின்னினார்கள்.

மூவரில் கடைசி சகோதரர்
திரு ரிஃபாய் முஹம்மது
மிகச் சிறந்தவீரர்.

எனது வகுப்புத்தோழர்கள்
*திரு குணபாலன்,*
*திரு மனோகரன்*
போன்ற சிறந்தவீரர்கள்
சவேரியார் கல்லூரி அணியில்
இந்த மைதானத்தில்
விளையாடி புகழ்
பெற்றிருக்கிறார்கள்.

திருநெல்வேலி
மருத்துவக்கல்லூரியில்
மருத்துவம் படித்துவந்த
*தெற்கு பஜார்*
*திரு கு.கிருஷ்ணன்*
அவர்கள் சிறந்த
வீரராக பெயரெடுத்தார்.

இளைஞர்களின்
மனங்கவர்ந்த வீரர்களில்
*திரு பென்னி,திரு வசந்த்,*
*திரு குமாரவேல்,*
*திரு ஷேக்மதார்*
*கோல்கீப்பர் சேவியர்*
போன்ற வீரர்கள் உண்டு.

*SGKR* பஸ் கம்பெனி
குடும்பத்து இளவல்
*திரு செந்தில்* என்ற ஒரு
விளையாட்டுவீரரும்
இந்த வ.உ.சி  திடல்
உயர்த்திய பிள்ளைதான்.

*மாவட்ட ஆக்கி*
*பயிற்சியாளரான*
*பெரியவர் ஜார்ஜ்*
*இந்த திடலில்தான்*
*வீரர்களை பயிற்றுவித்தார்.*

பாளை நகர ரசிகர்களால்
போற்றப்படுபவராக
விளங்கினார்.

விளையாட்டிற்கென்று
அரசாங்கத்தால்
அண்ணா ஸ்டேடியம்
என்ற ஒரு திடல் தனியாக
அமைக்கப்பட்ட பிறகு
*வ உ சி திடலில் நடக்கும்*
*விளையாட்டு போட்டிகளும்*
*பிற பயிற்சிகளும்*
*மறைந்துவிட்டன.*

இந்தத்திடலின்
தெற்குப்பகுதியில்
ஓர்  உள்ளரங்கு
விளையாட்டுக்கட்டிடம்
புதிதாகக் கட்டப்பட்டு
வ உ சி திடலுக்கு
பெருமை சேர்த்திருக்கிறது.

ஒவ்வொருவருடமும்
*சுதந்திர நாளிலும்*
*குடியரசுநாளிலும்*
*காவலர்* மற்றும்
*தேசிய மாணவர்படை* யின்
*அணிவகுப்பு* தவறாமல்
*இந்த மைதானத்தில்*
*நடைபெறுவது வழக்கம்.*

இரண்டு முறை
சவேரியார் கல்லூரி
தேசிய மாணவர்படையின்
சீனியர் அண்டர் ஆபீசர்
என்ற நிலையில் நானே
தேசிய மாணவர் படையின்
அணிவகுப்பை முன்னின்று
வழிநடத்தியிருக்கிறேன்.

சில பல நேரங்களில்
நகர்மன்ற நிர்வாகம்
பல எதிர்ப்புக்களையும்
மீறி *விளையாட்டுக்கு*
*சற்றும் தொடர்பில்லாத*
*பல்வேறு  நிகழ்ச்சிகளுக்கு*
*அனுமதி கொடுத்த*
*அவலமும் நடந்ததுண்டு.*

1970 களின் துவக்கத்தில்
இந்த திடலில்
திரு கான் அப்துல்
கபார்கான் மற்றும்
நடிகர் திலகம் சிவாஜி
பங்குகொண்ட
பொதுக்கூட்டங்கள்
நடந்திருக்கின்றன.

அவர்கள் கலந்துகொண்ட
பொதுக் கூட்டத்திற்கு
நான் சென்றது இன்றும்
என் நினைவில்
பசுமையாக உள்ளது.

ஒன்றிரண்டு முறை
*சர்க்கஸ் கூட நடத்த*
*அனுமதித்தார்கள்.*

இதுபோன்ற
பல நிகழ்வுகளால்
*இந்த திடல் மிகவும்*
*சேதப்பட்டுப்போனது.*

பல  பெருமைகளை
தன்னகத்தே வைத்துள்ள
இந்த வ உ சி திடலானது
*இன்று நடைப்பயிற்சி*
*செய்பவர்களுக்கு*
*நல்லதொரு இடம்.*

*குழந்தைகளின்*
*பொழுது போக்கிற்கும்*
*நல்லதொரு களமாக*
*திகழ்ந்து வருகிறது.*

திடலின் சுற்றுச் சுவர்களை
ஒட்டிய பகுதிகளில்
தள்ளு வண்டிகள் மூலம்
நடைபெறும்
தின் பண்டங்களின்
விற்பனை நன்றாகவே
நடந்துகொண்டிருக்கிறது.

*பாளை மக்களின்*
*நெஞ்சில் நீங்காத*
*இடம்பெற்றுள்ள*
*உயிரோட்டமுள்ள*
*ஓர்  அங்கம் தான்*
*வ.உ.சி திடல்.*

இந்த திடலை
*வளர்க்காவிட்டாலும்*
*பரவாயில்லை.*

அதனை சிதைக்காமல்
*பாதுகாக்கவேண்டிய*
*பெரும் பொறுப்பு*
*ஒவ்வொரு*
*பாளையங்கோட்டை*
*இளைஞனுக்கும்*
*நிறையவே உண்டு.*

*---தொடரும்*




*தகவல் -5*

திருநெல்வேலியும்
பாளையங்கோட்டையும்
*இரட்டை நகரங்கள்* என்றாலும்
இரண்டு ஊர்களுக்குமிடையே
*நிறைய வேறுபாடுகள்* உண்டு.

*திருநெல்வேலி* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *கருப்பந்துறை..*

*பாளையங்கோட்டை* யில்
*சுடுகாடு* இருக்கும் இடத்தின்
பெயர் *வெள்ளக்கோயில்.*

*திருநெல்வேலி* யில்
1970க்கு முன்னர்
குடிநீருக்காக
தாமிரபரணி ஆற்றில்
*ஓடும் நீரை* பம்ப் செய்து
குறுக்குத்துறை அருகில்
ஒரு இடத்தில் சேமித்துவைத்து
நகர் முழுதும் *விநியோகம்*
*செய்துவந்தார்கள்.*

*பாளையங்கோட்டை* யில்
நகர மக்களின்
குடிநீர் தேவைக்காக
அருகில் உள்ள
மணப்படைவீடுஎன்ற ஊரில்
*ஆழ்துளைக் கிணறு* போட்டு
தண்ணீரை பம்ப் செய்து
பெரிய குழாய்கள் மூலம்
பாளையங்கோட்டை
சமாதானபுரத்தில் இருக்கும்
வாட்டர்டாங்கில் ஏற்றி
அதிலிருந்து *விநியோகம்*
*செய்தார்கள்..*

*திருநெல்வேலி* யில் தான்
*நிறைய திரையரங்குகள்*
அமைக்கப்பட்டிருந்தன.

1970 வரை *பாளையில்*
*அசோக் டாக்கீஸ்* மட்டுமே.

*திருநெல்வேலி* யில்
*இந்துக்கல்லூரி* மட்டுமே.
1967க்குப்பிறகு தான்
*ராணி அண்ணா*
*மகளிர் கல்லூரி.*

*பாளையங்கோட்டை* யில்
*சவேரியார் கல்லூரி,*
*யோவான் கல்லூரி,*
*சாரா டக்கர் கல்லூரி,*
*அரசு மருத்துவக்கல்லூரி*
என பல கல்விக்கூடங்கள்.

*சதக்கத்துல்லா கல்லூரி,*
*அரசு சித்த மருத்துவக்கல்லூரி,*
*அரசு பொறியியற்கல்லூரி,*
*சாரதா கல்லூரி,*
*அரசு சட்டக்கல்லூரி,*
என பிற்பாடு
பல கல்வி  நிறுவனங்கள் வந்தன.

*பள்ளிப்படிப்பில்*
பல முறை *மாநிலள அளவில்*
*முதலிடம்* பெற்று பெருமை சேர்த்த
மாணவச்செல்வங்கள்
*பாளையங்கோட்டை*
*பள்ளிகளிலிருந்துதான்.*

இதனால் தானோ என்னவோ
*பாளையங்கோட்டை*
*Oxford of South* என்று
*புகழ் பெற்றது.*

பாளையங்கோட்டை
கல்வி நிலையங்களால்
சூழப் பட்டதால்
*தெற்கு வீதியில் மட்டும்*
அந்தோணிஸ்கூல்
சர்ச்சிலிருந்து தொடங்கி
ராமர் கோவில்வரை
*நூறுக்கும் கூடுதலான*
*தையற்கடைகள் இருந்தன.*

இப்போது அவைகள்
குறைந்துவிட்டன.

இரண்டு நகரங்களுக்குமிடையே
*கலாச்சார வேறுபாடுகளும்*
*நிறையவே உண்டு.*

*திருநெல்வேலி ஆசாரம்*
என்று  தங்களை  உயர்த்தியும்
பாளையங்கோட்டைக்காரர்களை
மட்டந்தட்டியும் பேசி
*திருநெல்வேலிக்காரர்கள்*
*மகிழ்ச்சியடைவார்கள்.*

முதலில் மாவட்ட
*அரசு மருத்துவமனை*
பாளைப்பகுதியான
*வண்ணாரப்பேட்டை*
*சாலைத்தெரு* வில்
செயல்பட்டு வந்தது.

மாவட்ட புதிய மருத்துவமனை
ஹைகிரவுண்டில்
செயல்படத் தொடங்கியதும்
*வண்ணாரப்பேட்டை மருத்துவமனை*
*பழைய ஆசுபத்திரி* யாக மாறியது.

*மனோன்மணியம் சுந்தரனார்*
*பல்கலைக்கழகம்*
நிறுவ முடிவுசெய்த போது,
பல்கலைக்கழகத்தை
பாளையில் அமைப்பதற்காக
*சீவலப்பேரி ரோட்டில்*
இடம் எல்லாம் பார்த்து
*கையகப்படுத்தியிருந்தனர்.*

அடுத்து ஏற்பட்ட
*ஆட்சி மாற்றத்தினால்*
*அரசியல் காரணங்களுக்காக*
*நெல்லைப்பகுதிக்கு* புதிய
பல்கலைக்கழகம்
*கடத்திச் செல்லப்பட்டது.*

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
பகுதிகளில்
*தனியார் மருத்துவமனை*
என்று  தனியார் ஒருவரால்
முதலில் அமைக்கப்பட்டது
*திரு வேலாயுதம்பிள்ளை* அவர்களின்
*மருத்துவமனைதான்.*

இதற்குப்பிறகே மற்ற
மருந்துவமனைகள் வந்தன.

*கண் மருத்துவத்திற்கென்று*
*டாக்டர் போத்திலிங்கம்*
*மருத்துவமனை* தான்
பாளையங்கோட்டையில்
முதன் முதலில் வந்தது.

*திருநெல்வேலியில்*
*ENT க்கு டாக்டர் முத்தையாவும்*
*பல் மருத்துவத்திற்கு*
*டாக்டர் CHEN* என்ற
சைனாக்காரரும்
*சிறந்த நிபுணர்கள்.*

பாளையங்கோட்டை
முருகன் குறிச்சியின்
*ஊசிக் கோபுரம்*
பாளையங்கோட்டையின்
*ஓர் அடையாளச்சின்னம்.*

அந்தக் காலகட்டத்தில்
நூற்றாண்டு மண்டபம்
அருகிலிருந்த
*எட்வர்ட் அன்கோ*
புகழ்பெற்ற ஒரு கடை.

*நூற்றாண்டு மண்டபம் அருகே*
1960 களில் இந்திய முறை
*சித்த மருத்துவ கல்லூரி*
*மற்றும் மருத்துவமனை*
தொடங்கப் பட்டது.

*நூற்றாண்டு மண்டபம்,*
*நேருஜி சிறுவர் அரங்கம்,*
திருச்செந்தூர் சாலையிலிருந்த
*பால் ஆஸ்பத்திரி* போன்றவை
பாளையின் *பெருமைகளில்*
*முக்கியமானவை.*

சீவலப்பேரி சாலையில்
சாந்திநகர் எதிரில்
*பேராசிரியர் ராஜேந்திரன்*
அவர்களின் *பாம்புப்பண்ணை*
அமைந்திருந்தது.

*இப்போது* அங்கு
*அந்த பண்ணை இல்லை*
என்றாலும் அதனை
நினைக்கும்போது
வயிற்றில்
புளியைக்கரைக்கத்தான்
செய்கிறது.

ஒருமுறை
*தமிழ்நாட்டில்*
*சிறுசேமிப்பில்*
*நெல்லை* மாவட்டம்
*முதலிடம் பெற்றது.*

அதற்குக்கிடைத்த
*ஊக்கப்பணத்தில்*
பாளை சாந்திநகரில்
*திம்மராஜபுரம் விலக்கருகில்*
*மணிக்கூண்டு* ஒன்று
நிறுவப்பட்டது.

இப்போது நேரத்தினை
காட்ட *கடிகாரம்* ஏதும்
*இல்லாவிட்டாலும்*
அந்த மணிக்கூண்டு
*பாளையின் அடையாளமாகவே*
திகழ்கிறது.

இப்படி *பழம் பெருமைகளை*
*எப்போது நினைத்துப்பார்த்தாலும்*
*மனம் துள்ளல் போடுகிறது.*

*--தொடரும்*

#பாளையங்கோட்டை பற்றி...

தகவல்-6

அந்தக்கால
பாளையங்கோட்டை..

பாளையங்கோட்டை
வடக்குப்பகுதியில்
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனை பிரபலம் என்றால்
தென்பகுதியில்
மதர் ஆசுபத்திரி
மிகவும் பிரபலம்.

1960 வரை
குழந்தைகளின் பிறப்பு
ஆயாக்களின் தயவிலும்
வீட்டுப் பெரியவர்களின்
அனுபவங்களின் மூலமும்
அவரவர் இல்லங்களில்
வைத்துதான் நடந்தது.

1960 லிருந்து
விஞ்ஞான முன்னேற்றத்தால்
மகப்பேறு மருத்துவமனைகள்
கொஞ்சம் கொஞ்சமாக
நகர்ப்பகுதிகளில்
முளைக்கத் துவங்கின.

தென்பகுதி மதர் ஆசுபத்திரி
முழுக்கமுழுக்க
இயேசு திருச்சபையின்
வெள்ளைக்கார
அன்னையர்களால்
இலவச சேவையாக
நடத்தப்பட்டுவந்தது.

மகப்பேறுகள் வீட்டிலிருந்து
மருத்துவமனைகளுக்கு
மாறத்தொடங்கின.

மத வேறுபாடின்றி
அனைத்து மதத்துக் குடும்பங்களும்
அந்த வசதியைப்பயன்படுத்த
தொடங்கினர்.

எனக்கு நன்கு தெரிந்த
ஒன்றிரண்டு குடும்பங்களில்
பிரசவம் பார்த்த
வெள்ளைக்கார அன்னையர்கள்
நினைவைப்போற்றும் வண்ணம்
பெண் குழந்தை பிறந்தால்
துரைச்சி என்றும் ஆண்குழந்தை
பிறந்தால் துரைராஜ் எனவும்
தாங்களே மனமுவந்து
பெயரிட்டு நன்றி பாராட்டினர்.

பாளையங்கோட்டை
தெற்குப்பகுதியில்
பல கல்விமனைகளும்
மாணவர் தங்கும் விடுதிகளும்
அமையப்பெற்றிருந்தன.

தூய அந்தோணியார் பள்ளி,
செவன் டாலர்ஸ் பள்ளி,
கிறிஸ்துராஜா பள்ளி,
தூய யோவான் உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளி,
லயோலா காண்வெண்ட்,
இக்னேஷியஸ் காண்வெண்ட்,
STC உயர்நிலைப்பள்ளி,
தூய சவேரியார் கல்லூரி,
தூய யோவான் கல்லூரி,
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி,
சேவியர் ஆஸ்டல்,
பிரிட்டோ ஆஸ்டல்,
தூய இருதய ஆஸ்டல்,
செல்வின் ஆஸ்டல் ,
என மாணவ மாணவியர்களால்
தென்பகுதி மிகவும்
கலகலப்பாகக்காணப்பட்டது.

பெருமாள் புரம் STC கல்லூரி
முருகன்குறிச்சி கதீட்ரல்பள்ளி,
மேரி சார்ஜண்ட் பள்ளி,
பார்வையற்றோர்பள்ளி,
பேசமுடியாதவர் பள்ளி என்றும்
பல வகை கல்விமனைகள்.

இதன் பொருட்டு
பாளையங்கோட்டை ஒரு
கல்வி ஆலயமாக திகழ்ந்து
பெருமை பெற்றது.

திரு வை.கோபால்சாமி,
திரு வலம்புரிஜாண்,
திரு பீட்டர் அல்போன்ஸ்
திரு தளவாய் சுந்தரம்,
திரு தங்கராஜ் பாண்டியன்,
முன்னாள் அமைச்சர்கள்
திரு திருநாவுக்கரசர்,
திரு முத்துசாமி போன்ற
புகழ்பெற்ற பல
அரசியல் கட்சித்தலைவர்களையும்
உருவாக்கி உலகுக்கு அளித்தது
தூய சவேரியார் கல்லூரி.

உச்சமன்ற நீதிபதியாக
உழைப்பால் உயர்ந்த
உச்சநீதிமன்ற  நீதியரசர்
திரு ரத்தினவேல்பாண்டியன் ஐயா
அவர்களை வளர்த்து மகிழ்ந்தது
சவேரியார் கல்லூரியே.

ஆலடி அருணா போன்றோரை
யோவான் கல்லூரி உயர்த்தியது.

இன்னும் எத்தனையோ
விஞ்ஞானிகளையும்
IAS,IPS அலுவலர்களையும்
பாளையங்கோட்டையின்
கல்வி ஆலயங்கள்
உருவாக்கியுள்ளன.

பாளையங்கோட்டை
மத்திய சிறைச்சாலையும்
பெரியதொரு வளாகத்தில்
குலவணிகர புரத்திற்கும்
பெருமாள்புரத்துற்கும்
நடுவே அமைந்துள்ளது.

இதுகூட  ஒரு வகையில்
குற்றவாளிகளைத்திருத்தும்
நல்ல தொரு பள்ளிக்கூடம்தானே..

பாளை வடக்குப்பகுதியில்
காந்தி தினசரி சந்தைக்கு கிழக்கு,
மனகாவலம்பிள்ளை
மருத்துவமனைக்கு மேற்கு,
திருச்செந்தூர் ரோட்டிற்கு தெற்கு,
மனகாவலம்பிள்ளை மருத்துவமனை
ரோட்டிற்கு வடக்கு என்பதை
தனது எல்கையாகக்கொண்ட
"ஜவஹர் திடல் " என்ற
ஒரு பெரிய திடல் உள்ளது

நல்ல பள்ளத்தில்
இந்த திடல் இருந்தது.
சிறு வயதில் அதாவது 1960 களில்
இங்கு ஹாக்கி கூட
விளையாண்டிருக்கிறேன்.

இப்போது பள்ளம் நிரப்பப்பட்டு
ரோடு உயரத்தில்
திடல் உள்ளது.

1960-70 களில்
அரசியல் பொதுக்கூட்டங்கள்
இங்கு தான் நடைபெறும்.

அண்ணா, மொரார்ஜி, கலைஞர்,
எம்ஜியார், சம்பத், நம்பூதிரிபாட் டில்
தொடங்கி தீப்பொறி ஆறுமுகம் வரை
பலர் பேசிய மைதானம் இது.

இன்றும் அரசியல் கூட்டங்கள்
உண்ணாவிரதப போரட்டங்கள்
என்று பல நிகழ்ச்சிகள்
நடைபெற்றுக்கொண்டுதான்
இருக்கின்றன.

லாரி வேன் என நிறுத்தப்பட்டு
மூக்கை மூடவைக்கும்
மூத்திரக்காடாக
சீரழிந்த நிலையில் இருக்கிறது.

வடநாட்டு வீர்ர்களான
கிங்காங், தாராசிங் போன்றோர்
பங்கெடுத்த பல
மல்யுத்தப்போட்டிகள்
இந்த திடலில்
நடைபெற்றிருக்கின்றன.

புகழ்பெற்ற தசரா பண்டிகை
கொண்டாட்டத்தின்போது
ராட்சச ராட்டினம், குடை ராட்டினம்,
மரணக்கிணறு, நாக கன்னிகை,
என பல பொழுதுபோக்கு
கொண்டாட்டங்கள்
இந்த திடலில் தான்
நடைபெற்றிருக்கின்றன.

இந்த திடல் முழுதும்
பல வருடங்களுக்கு முன்
ஒரு தனியாருக்குத்தான்
சொந்தமாக இருந்துள்ளது.

உரிமையாளரான அம்மையார்
காந்திமார்கெட்டிலிருந்து
சமாதானபுரம் வரை
நீண்டிருந்த மொத்த இடத்தையும்
பாளை நகராட்சிக்கு
சில நிபந்தனைகளோடு
எழுதி வைத்தாராம்.

அந்த இடத்தில்
மருத்துவமனை,
பள்ளிக்கூடம்,
விளையாட்டுத்திடல்போன்று
பொதுமக்களுக்கு
பயன் தரக்கூடியவைகளை
ஏற்படத்திக்கொள்ளலாம்,
வேறு எந்த கட்டிடங்களும்
கட்டக்கூடாது என்பது தான்
போடப்பட்ட நிபந்தனைகள்.

வாட்டர்டாங்க் கட்டப்பட்டது.
மருத்துவமனை கட்டப்பட்டது.
முன்னாள் ராணுவவீரர்கள்
நடத்திய பஸ் கம்பெனிக்கு
இடம் ஒதுக்கப்பட்டது.

இந்த தகவல்களை
வயதில் பெரியவர்கள்
பேசிக்கொண்டிருந்போது
ஒட்டுக்கேட்டிருக்கிறேன்.

தசராக் கொண்டாட்டங்களின்போது
தெருச்சண்டை,
வடபகுதி தென்பகுதிச்சண்டை
ஜாதிச் சண்டை என்று
பேச்சில் தொடங்கி
அடிதடியில் வளர்ந்து
கொலை வரை கூட சென்ற
அசம்பாவித சம்பவங்கள்
நடைபெற்றிருக்கின்றன.

தலை நிமிர்த்து
பெருமைப்படக்கூடிய நிகழ்வுகள்
பல நடந்திருந்தாலும்
தலகுனிந்து  வருந்தவேண்டிய
மேற் கூறிய நிகழ்வுகளை
மனதிலிருந்து அகற்றவேண்டும்.

பெருமைப்படக்கூடிய ஊர்தான் பாளையங்கோட்டை.
.

1 கருத்து:

  1. பாளை பாப்புலர் நிறுத்தம் அருகில் முருகன் தியேட்டர், சாந்தி நகரில் சாந்தி டாக்கீஸ் (தீ பிடித்து) 1970 களத்தில் இருக்க கூடும்...

    பதிலளிநீக்கு