செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

ஷாஜஹானின் "காதல்" மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல



ஷாஜஹானின் "காதல்" மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல...

ஆட்டைய போடுறதுல இவனுங்க எக்ஸ்பர்ட்....அது...பொன்னோ, பொண்ணோ, மண்ணோ.........

ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் மீது படையெடுத்த எல்லா இஸ்லாமிய வெளிநாட்டவர்களும் இந்தியாவின் மீதும் அதன் மக்களின் மீதும் காதல் கொண்டவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. அது கோரி முகமதாகட்டும், கஜினி முகமதகட்டும், பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் என அத்தனை பேர்களின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பது மட்டும்தான். அப்படி அவர்கள் இருந்ததாக இந்தியப் பாடப்புத்தகங்களில் எழுதி வைத்து நம்மை மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நாம் உணர வேண்டும். அக்பர், ஷாஜஹான் போன்றவர்கள் இந்தியர்கள் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்கள் மண்ணின் மைந்தர்களான ஹிந்துக்களுக்கு  நன்மைகள் செய்தார்கள் என்பதெல்லாம் அப்பட்டமான கட்டுக்கதைகளே. அத்தனை முகலாய அரசர்களும் மத அடிப்படைவாத எண்ணம் கொண்ட, போதைக்கு அடிமையான, கொள்ளைக்கார, கொலைகார, பெண் பித்தர்கள். பெருமளவு பணம் செலவு செய்து இந்தியாவில் அழகான கட்டிடங்களைக் கட்ட அவர்கள் பைத்தியக்காரர்கள் இல்லை.

இந்தியாவின் செல்வங்களைக் கண்மூடித்தனமாகக் கொள்ளையடித்தாலும் எந்த முகலாய அரசனும் பணக்காரனில்லை. அவர்கள் அடித்த கொள்ளைகள் அவர்கள் வைத்திருந்த மிகப் பெரும் ராணுவத்திற்கே செலவாகியது. நாடெங்கிலும் அவர்களுக்கு எதிராக எழுந்த கலவரங்களை ஒடுக்குவதற்கு அவர்களுக்கு பெரிய ராணுவம் தேவையான ஒன்று. எனவே அவர்களுக்கு எந்த நேரமும் பணத்தேவை இருந்து கொண்டே இருந்தது. ஷாஜஹானின் காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த ஃப்ரெஙஞ்ச் நாட்டு வியாபாரி டாவர்னியர், ஷாஜஹானின் மொத்த செல்வத்தின் அளவு ஆறு கோடி ரூபாய்கள் மட்டுமே என்கிறார். அதையும் விட ஷாஜஹான் உலக மகா கஞ்சன் என்கிறார். அந்தப்புரத்துப் பெண்கள் கேட்கும் எந்தவொரு சிறு பொருளையும் வாங்கிக் கொடுக்க மனம் வராத ஒரு பிசிநாறியாகவே ஷாஜஹானைச் சொல்கிறார் டாவர்னியர்.

அப்படியாகப்பட்ட ஒரு மனிதன் பெரும் செலவும், நேரமும் பிடிக்கும் தாஜ்மஹாலை ஒரு போதும் கட்டியிருக்க வாய்ப்பில்லை. தாஜ்மஹால் ஏழுமாடிகளை உடைய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகளை உடையதொரு கட்டிடம். இன்று சமாதிகள் இருக்கும் தளத்திற்குக் கீழ் மேலும் இரண்டு அல்லது மூன்று தளங்கள் இருக்கின்றன. இவ்வளவு செலவு செய்து தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் அந்தத் தளங்களை மூடிவைக்கக் காரணம்தான் என்ன? பி.என். ஓக்கின் புத்தகத்தைப் படித்து ஆச்சரியமடைந்த அமெரிக்க கல்லூரி புரொஃபசர் ஒருவர் இந்தியாவிற்கு வந்து பி.என். ஓக்குடன் தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்த்து அது ஒரு ஹிந்துக் கட்டிடம்தான் என்று உறுதிப்படுத்துகிறார். யமுனை நதிக்கரையை ஒட்டியிருந்த ஒருகதவின் ஒரு சிறிய பகுதியை அமெரிக்காவிற்கு எடுத்து வந்து கார்பன் டேட்டிங் செய்ததில் அந்தக் கதவு ஏறக்குறைய 230 வருடங்கள் பழமையானது எனக் கண்டுபிடிக்கிறார். அதாகப்பட்டது ஷாஜஹான் கட்டியதாகச் சொல்லப்பட்ட வருடத்திலிருந்து 230 வருடங்கள் பின்னால்.

எல்லோரும் நினைப்பது போல ஷாஜஹானின் "காதல்" மனைவி மும்தாஜ் அழகியோ அல்லது உடல் வனப்பில் சிறந்தவளோ அல்ல. ஷாஜஹானின் வரலாறான பாத்ஷாநாமாவில் மவுல்வி மொய்னுதீன் அகமது அந்தப் பெண்மணியின் உண்மையான பெயர் அர்ஜுமண்ட்பானு பேகம் என்கிறார். அதையும் விட மும்தாஜ் அரச குடும்பத்தில் பிறந்த பெண்ணும் இல்லை. ஜ்ஹாங்கீரிடம் அமைச்சராகப் பணிபுரிந்த மிர்ஸா கியாய் பெய்க்கின் பேத்தி அவள். மிர்ஸா கியாஸ் பெய்க் பாரசீக அரண்மனையில் பணியாளாக வேலை செய்தவர். ஆனால் அவரது அழகான மகள் ஜஹாங்கீரின் வைப்பாட்டியாக இருந்ததால் கியாஸ் பெய்க் ஜஹாங்கிரிடம் முதல் அமைச்சராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர். அந்த வகையில் அவரது பேத்தியான மும்தாஜ் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்தான். 1612-ஆம் வருடம் ஷாஜஹானுடன் திருமணம் நடக்கிறது என்றாலும் மும்தாஜ் பட்டத்தரசி அல்ல. ஷாஜஹானின் முதல் மனைவியும் பட்டத்தரசியுமானவள் பாரசீக அரசரான ஷா இஸ்மாயில் ஷ்ஃபியின் பேத்தியாவாள். எனவே மும்தாஜ் ஷாஜஹானின் அந்தப்புரத்திலிருந்த 5000 பெண்களில் ஒருத்தி மட்டுமே.

மும்தாஜ் பர்ஹான்பூரில் இறந்த வருடம் எதுவென்ற சரியான குறிப்புகள் எதுவும் இல்லை. 1629, 1630, 1631 என்று ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு வருடத்தைக் கூறுகிறது. மனைவி மேல் மாளாக் காதலுள்ள ஷாஜஹான் அவள் இறந்த வருடத்தைக் கூடவா பாத்ஷாநாமாவில் எழுதி வைக்க மறந்துவிட்டார்? அதையும் விட மும்தாஜ் பிறந்ததாகக் கூறப்படும் வருடமும் போலித்தனமானதே. மும்தாஜின் மீது ஷாஜஹானுக்கு உண்மையான காதல் இருந்தால் அவள் இறந்த பர்ஹான்பூரிலேயே அவளுக்கு தாஜ்மஹாலைக் கட்டியிருக்க வேண்டும். அதையேன் அவர் செய்யவில்லை? புதைத்த ஆறுமாதம் கழித்து தோண்டியெடுக்கப்பட்ட மும்தாஜின் உடல் ஆக்ராவிற்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும் ஒரிடத்தில் புதைக்கப்படுகிறது. பிறகு ஒருவருடம் கழித்து தோண்டியெடுக்கப்பட்டு "கட்டப்பட்டுக் கொண்டிருக்கிற?!!" தாஜ்மஹாலில் புதைக்கப்படுகிறது.

மும்தாஜைக் குறித்து இன்னொரு விஷயத்தை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மதவெறியில் மும்தாஜ் எந்த முகலாய அரசனுக்கும் சளைத்தவளில்லை என்பதுதான் அது. ஹிந்துக்களின் மீதும் இந்தியாவிற்குள் வர ஆரம்பித்திருந்த கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் மும்தாஜின் நிலைப்பாடு மிகவும் அச்சமூட்டக் கூடிய ஒன்று. ஷாஜஹானின் அரண்மனையில் மருத்துவராகப் பணிபுரிந்த வெனிஸ் நாட்டவரான நிகோலோ மானுச்சி மும்தாஜின் மதவெறியைக் குறித்து இப்படிச் சொல்கிறார். "மும்தாஜின் காலத்தில் கிறிஸ்தவ போர்த்துக்கீசியர்கள் முகலாய அரசவையை வந்தடைந்திருந்தால் மும்தாஜ் அவர்களைப் பல துண்டுகளாக வெட்டியெறிய உத்தரவிட்டிருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பிடிபட்டவர்கள் பல குரூரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பார்கள். அவர்களின் மனைவிமார்கள் பிடிக்கபட்டு பலருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களில் அழகிகள் ஷாஜஹனின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்கள்" என்கிறார்.


மும்தாஜின் தூண்டுதலால் ஷாஜஹான் வங்காளத்தின் ஹூக்ளி பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் சர்ச் ஒன்றை தரைமட்டமாக்கியிருக்கிறார். கோவாவில் பிடிபட்ட 400 கிறிஸ்தவர்களில் முஸ்லிமாக மதம் மாறச் சம்மதித்தவர்களைத் தவிர்த்து அத்தனை பேர்களும் கொடுமையான முறையில் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட கிறிஸ்தவர்களை யானைகளின் கால்களில் தலையை இடற வைப்பது ஷாஜஹானின் பொழுதுபோக்கில் ஒன்று. பனாரஸில் ஹிந்துக்கள் கோவிலொன்றைக் கட்டுகிறார்கள் என்பதறிந்து கோபமடையும் ஷாஜஹான் அதனை உடனே இடித்துத் தகர்க்க உத்தரவிடுகிறார். அப்படியும் கோபம் குறையாமல் தனது ஆட்சிக்காலம் ஆரம்பமானதில் இருந்து கட்டப்பட்ட அத்தனை காஃபிரி ஹிந்துக் கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டு அப்படியே செய்து முடிக்கப்படுகிறது.

அரச குலத்தில் பிறக்காத, அரசவையில் பெரும் பதவியிலிருக்காத ஒருவருக்குப் பிறந்த, அழகோ அல்லது உடல் வனப்போ இல்லாத சாதாரணப் பெண்ணான மும்தாஜின் மரணத்தைக் காரணம் காட்டி ஷாஜஹான் ராஜா ஜெய்சிங்கிடமிருந்து அரண்மனையைப் பிடுங்கி அதனைத் தனதாக்கிக் கொண்டார். இறந்து பலகாலம் வரைக்கும் அர்ஜுமன்பானு பேகமாகவே இருந்தவள் ஷாஜஹானுக்கு வசதியாக மும்தாஜ் (The chosen one) என அழைக்கப்பட ஆரம்பிக்கப்படுகிறாள்.

I will stop here. I had enough on this subject. If you need further information I would highly recommend you to read P.N. Oak's book. It got lots of interesting research information.
Narenthiran PS Ji.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக