ஞாயிறு, 25 மார்ச், 2018

பஞ்சமி நிலத்தை வாங்கலாமா? பஞ்சமி நிலம் என்றால் என்ன?



பஞ்சமி நிலத்தை வாங்கலாமா? பஞ்சமி நிலம் என்றால் என்ன?

_ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக் காலத்தில்செங்கல்பட்டு மாவட்டத்தின் பொறுப்பு ஆட்சியராகஇருந்த திரு ஜேம்ஸ் ட்ரெமென்கீர் என்பவர்தாழ்த்தப்பட்ட மக்களான பறையர்களைப் பற்றியஅறிக்கை ஒன்றை தயாரித்து, 1891ஆம் ஆண்டுஆங்கிலேய அரசிடம் தாக்கல் செய்தார். _

_அந்த அறிக்கையில் பறையர்களுக்கு இலவசமாகநிலம் வழங்குவதன் மூலம் அவர்களுடையவாழ்க்கையை அரசாங்கம் மேம்படுத்த முடியும்என்ற கருத்தை அதில் வலியுறுத்தி இருந்தார்.இந்த அறிக்கையானது ஆங்கிலேயநாடாளுமன்றத்தில் 1892ம் ஆண்டு, மே மாதம்16ஆம் தேதி விவாதத்துக்கு வந்தது._

*பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம்*

_1892ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில்நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்தியாமுழுவதும் 12.5 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களைதலித் மக்களுக்கு இலவசமாக அன்றையஆங்கிலேய அரசு வழங்கியது. அப்போதையசென்னை மாகாணத்தில் மட்டும் தலித்மக்களுக்கு, இலவசமாக  2 லட்சம் ஏக்கர்விளைநிலங்கள்  ஆங்கிலேய அரசால்வழங்கப்பட்டது.  இந்த நிலத்தை சுருக்கமாக D.C.Land (Depressed Class Land)என்றும் சொல்கிறார்கள்._

*சட்டத்திலுள்ள முக்கிய நிபந்தனைகள்*

_இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களில், ஷைதாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்தோ, வீடுகள்கட்டிக்கொண்டோ அதனை அனுபவிக்கலாம்.குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தான்,அவர்கள் இந்த நிலங்களை பிறருக்கு விற்கமுடியும். அதுவும், அவர்கள் வகுப்பைச்(Depressed Class) சார்ந்தவர்களிடம் தான் விற்கமுடியும். வேறு எந்த வகுப்பினரிடம் விறறாலும்அந்த விற்பனை செல்லாது._

_தெரிந்தோ அல்லது தெரியாமலோ யாராவது,இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம்விற்க முயன்றால், பத்திரத்தை பதிவு அதிகாரி,அதனை பதிவு செய்யக்கூடாது. மீறி இந்த பஞ்சமிநிலங்களை வேறு ஒருவர் வாங்கினால், எந்தநேரத்திலும், அந்த நிலங்களைவாங்கியவரிடமிருந்து, அரசாங்கம் பறிமுதல்செய்யலாம். அதற்கு நஷ்ட ஈடு வழங்கப்படமாட்டாது._

_தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது என்கிற எண்ணத்திலேயே இந்தசட்டத்தை, ஆங்கிலேய அரசு உருவாக்கியது._

*பூமி தான இயக்கம்*

_1950ம் ஆண்டுக்குப் பிறகு, ஆசார்ய வினோபாஅவர்கள் பூமி தான இயக்கத்தின் வழியாக பொதுமக்களிடம் இருந்து பெற்று, பல நிலங்களைஇதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்குஅரசாங்கத்தின் மூலம் வழங்கினார். 1960ம்ஆண்டிலும் இந்த முறையில் நிலங்கள் தலித்மக்களுக்கு வழங்கப்பட்டன. ஆங்கிலஅரசாங்கத்தால் Depressed Class என்றுகுறிப்பிடப்பட்ட பெயர் இந்திய அரசியல் சட்டத்தில்,Scheduled caste - பட்டியல் வகுப்பினர்(அட்டவணை வகுப்பினர்) என்று பிற்பாடு மாற்றம் செய்யப்பட்டது. D.C.Lan (Depressed Class Land)_

*எச்சரிக்கை*

_நிலம் வாங்குகின்ற வேறு வகுப்பினர், பஞ்சமி நிலமாக இருந்தால் அதனை எக்காரணத்தை முன்னிட்டும் வாங்கக்கூடாது. நிலத்தை விற்பனை செய்பவர் வேறு வகுப்பினராகக்கூட இருக்கலாம். அவர் அந்த நிலத்தை ஒரு தலித்திடம் இருந்து அவர் பெற்று அதனை உங்களிடம் விற்றாலும் நீங்கள்தான் நஷ்டப்பட வேண்டியதிருக்கும். ஆகையால், ஒரு நிலம் வாங்கும் போது அந்த நிலத்தை விற்பவர் யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்பதை பார்ப்பது அவசியம் ஆகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக