இந்தியாவின் பழமையான நகரம் எது என்று உங்களுக்கு தெரியுமா ?
இந்தியாவிலேயே பழமைவாய்ந்த குடியிருப்புகளும், திருத்தலங்களும் சற்று அதிகமாக காணப்படும் பகுதி குஜராத். இந்த மாநிலத்திற்கு உட்பட்ட அகமதாபாத், உதய்பூர், துவாரகை, கட்ச், பதான் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க பல பழமையான கட்டிடங்களில் பல சிதிலமடைந்த நிலையிலும், சிலவை தனது பொழிவை இழக்காமலும் காட்சியளிக்கின்றன. இதில் பாழடைந்த நிலையில் காணப்படும் பழமையான நகரமான சம்பனேர் அகமதாபாத்தில் இருந்து 146 கிலோ மீட்டர் தூரத்திலும், வதோதராவில் இருந்து சுமார் 49 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதுபே இப்பகுதியின் பழமையான நகரமாக கருதப்படுகிறது.
சம்பனேர் நகரம் தற்போது வரை கவனிக்கப்பட காரணமாக இருப்பது சுல்தான் பேகதாவால் கட்டமைக்கப்பட்ட ஜமா மசூதி தான். குஜராத்தில் இருக்கும் மிகச்சிறந்த வரலாற்றுக் கட்டிடங்களில் ஒன்றான இந்த மசூதியில் முப்பதடி உயரமுள்ள இரண்டு மிகப்பெரிய தூண்கள், 172 தூண்களுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
குஜராத்தில் இந்து சமய மக்களின் எண்ணிக்கை 80 சதவிகிதத்திற்கு மேல் காணப்பட்டாலும், வதோதரா முதல் சம்பனேர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் இசுலாமிய மசூதிகளே அதிகளவில் காணப்படுகின்றன. இதில், சகர் கான் தர்கா, நஜினா மஸ்ஜித், கேவ்டா மஸ்ஜித், கமனி மஸ்ஜித், இட்டேரி மஸ்ஜித் என பல தொன்மைமிக்க மசூதிகள் வரலாற்றுச் சுவடுகள் மிக்கவையாகும். மேலும், தபா துங்ரி, சிந்தவி மாதாஜி கோவில், தப்லவாவ் அனுமான் கோவில், பதர் காளி மந்திர், சாட் கமன் உள்ளிட்ட கட்டிடக் கலைநயமிக்க கோவில்களும் உள்ளது.
சென்னையில் இருந்து வதோதரா செல்ல நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ், சென்னை எக்மோர்- ஜோத்பூர் வார ரயில், சென்ட்ரல் - அகமதாபாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன. மேலும், சென்னையில் இருந்து குறைந்த கட்டணத்தில் வதோதரா செல்ல விமான சேவைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக