மறைக்கபட்ட மாவீரன் மருதநாயகம்
மறைக்க பட்ட மாவீரன் மருதநாயகம் இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாக., sharlace shkill என்ற ஆங்கிலேயர் yusuf khan The Rebell Commander என்ற தலைப்பில் தன்னுடைய மனைவிக்கு அனுப்பிய கடிதத்தில் இதை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார் இதை தழுவியே அத்தனை வரலாற்று ஆய்வாளர்களும் அவருடைய வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள்
விவசாயம் செய்த அனைவரையுமே வேளான்மக்கள் என பொதுவாக அழைக்கும் அந்த பன்பு பெயரோடு மட்டுமே இதை அவர் இதை பதிவு செய்திருக்க கூடும் மருதநாயகம் குறித்த
முதல் கள ஆய்வு நூலான மறைக்கபட்ட பரையர் வரலாறு நூலின் ஆசிரியர் செ.மு. இமயவரம்பன் தன்னுடைய கள ஆய்வில் மருதநாயகம் தென் பகுதியில் பிரதான வேளான் சமுகமான சாம்பவர் குல மரபில் வந்தவர் என பதிவு செய்திருக்கிறார்
மருதநாயகம் பிறந்த பனையூர் கிராமத்தின் பெயரே பரையனூர் என்றும் பின்னாளில் பனையூர் என மருவி தாகவும் கூறுகிறார் மருதநாயத்தை உரிமை கொொண்டாடி வரும் பிரதான சமுகமான வெள்ளாளர்/வேளாளர் சமுகங்களே ஒரே சமுகம் கிடையாது எல்லாமே வெவ்வேறு சமூகங்கள் என்பதாலும் தங்கள் பங்கிற்கு மருதநாயகத்கதை சைவ வேளாளர் என்றும் சிலர் அவர் இல்லத்து(ஈழவர்) பிள்ளை என்றும் சிலர் கொடிக்கால் பிள்ளை என்றும் சிலர் வீரகுடி வெள்ளாளர் என்றும் சிலர் சோழியபிள்ளை என்றும் சிலர் வீரகுடிவெள்ளாளர் என்றும் கூறி வருகிறார்கள் வீரகுடி வெள்ளாளரை தவிர்த்து பனையூரில் பிற சாதிகள் வாழ்ந்த சான்றே கிடையாது என அறிய முடிகிறது சேனைத்தலைவர் எனும் சாதியும் தாங்களே கொடிக்கால் வெள்ளாளர் என்றும் கூறி கொள்கிறார்கள்
வீரகுடி வெள்ளாளரையையும் இராமநாதபுரம் மன்னர் அப்பகுதி பரையர்களின் விளை நிலங்களில் வெற்றிலை பயிர் செய்ய பட்டையம் எழுதி கொடுத்ததும் அவர்கள் அதற்கு நன்றியாக தினசரி வெற்றிலையில் ஒரு பங்கை அவர்கள் அதை மன்னருக்கு அவர்கள் கொடுத்தனர் அவர்களின் வேளான் தொழில் ஈடுபாட்டை பார்த்து அனைத்து பொது நிலங்களையும் அவர்களுக்கு குத்தகைக்கு விடுகிறார்
பின்பு அதற்கு கணக்கு வழக்கு எழுத சேலம் பகுதியில் இருந்து வீரகுடி வெள்ளாளர் சமுகத்தை சேர்ந்த இருசகோதரர்களை கணக்கை வழக்குநிமித்த பனிக்காக இராமநாதபுரம் மன்னர் குடியேற்றி இருக்கிறார்
அவர்களின் பாதுகாப்பிற்கு பின்பு கள்ளர் குடும்பத்தையும் குடி வைத்ததாக அவ்வூரில் வசிக்கும் 80 வயது மதிக்க தக்க பெரியவரான வீரகுடி வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்த திரு ராஜரத்தினம் அவர்கள் தகவல் தருகிறார்
மருதநாயகம் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் தழுவியவர் அங்கு உள்ள வீரகுடி வெள்ளாளர் குடும்பங்கள் புனித அருளானந்தர் என்பவரால் கத்தோலிக்க கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மாரியிருக்கிறார்கள் அங்கு வெள்ளாளர் இருந்த தெருவே கிறிஸ்தவர் தெருவென அழைக்கபடுகிறது இன்றும் அங்கு வெள்ளாளர்களால் உருவாக்கபட்ட தேவாலயம் உள்ளது
எந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் இது வரை இஸ்லாம் ஏற்றதாக தரித்திரம் இல்லை ஆனால் தென் பகுதியில் சிவகங்கை இராமநாதபுரம் கீழக்கரை கன்னியாகுமரியின் ஆளூர் தஞ்சை பகுதியில் திருப்பானாந்தாள் போன்ற பகுதியில் பெருமளவு பரையர்கள் இஸ்லாம் ஏற்றதையும் அறிய முடிகிறது
இஸ்லாம் ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார். இன்றும் மதம் மாறாத சுற்றுவட்டார18 கிராம சாம்பவர்/பரையர்களால் வணங்கபடும் பெரிய நாச்சியப்பன் கோவில் முன் வெள்ளாளர் திரு ராஜரத்தினம் அவர்களுடன் மறைக்கபட்ட பரையர் வரலாறு இதழின் ஆசிரியர் சேனாதிபதி ஜெ.மு.இமயவரம்பன் அவர்கள்
சிறு வயதில் பனையூரிலிருந்த மருதநாயகம் அப்பகுதி வழியே சென்ற பிரெஞ்சுகாரர் ஏற்பட்ட நட்பால் பெற்றோரிடம் சொல்லி விட்டு அவருடன் பாண்டிச்சேரி சென்று விடுகிறார் அங்கு அவருக்கு உதவியாளராக பணி செய்கிறார் அங்கு பிரெஞ்சு ஆங்கிலம் மற்றும் போர்த்துகீசிய மொழிகளையும் கற்று கொள்கிறார் தன்னுடைய அதி மிகு ஆர்வத்தால் மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது
பின்பு அந்த பிரெஞ்சுகாரர் உடன் தஞ்சை செல்கிறார் தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் துக்காஜி படை பிரிவில் நிறைய தமிழர்களை சேர்க்கிறார் 1729ல் சேர்ந்து கொஞ்ச காலம் துக்காஷியின் படை பிரிவில் ப புதுச்சேரிக்குச் செல்கிறார் 1727-.முதல் 1729 வரையிலான கால கட்டங்களில் வலங்கை பரையர்கள் தஞ்சை அரண்மனை பகுதியிலேயே 40 க்கும் மேற்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட இடங்கை சமூகமான கம்மாளர்களை குத்தி கொன்றதாக டச்சு ஆவணங்களில் பதிவு செய்யபட்டுள்ளது
வலங்கை பரையர்களுக்கு பயந்து இடங்கை தாழ்த்தபட்ட மக்கள் தஞ்சை பகுதியில் இருந்து வெறியேறியதாகவும் அதனால் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க அரசர் கேட்டு கொண்டும் துக்காஜியின் படை பிரிவில் இருந்த பரையர் மற்றும் ஏனைய வலங்கை சாதிகள் வலங்கை சமுகங்களுக்கு ஆதரவாகவே இருந்ததாகவும் அதனால் மன்னர் துக்காஜியின் கோபத்துக்கு பயந்து சிலர் தலைமறைவாகி விட்டதாகவும் டச்சு ஆவணங்களில் பதிவு செய்யபட்டுள்ளது மருதநாயகமும் அதனாலே படையில் இருந்து விலகி புதுச்சேரி சென்று பிரெஞ்சு படையில் சேர்ந்திருக்க வேண்டும்
புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார். அங்கே தான் அன்னை மாஷாவை மணம் முடிக்கிறார் அவரை மலையாள புலையர் பெண்ணுக்கும் பிரெஞ்சு தந்தைக்கும் பிறந்தவர் என்றும் பரையர் என்றும் இருவேறு கருத்துக்களை கூறுகிறார்கள்
பிரெஞ்சு ஆவணங்களிலும் துபாஷிகளின் குறிப்புகளிலும் கேரளபுலையர் குடியிருப்புகள் இருநததாக எந்த தகவலும் இல்லை அதனால் பரையராகவே இருக்க வேண்டும்
மருதநாயகம் போல் 60 க்கும் மேற்பட்ட பரையர்களும் பிரெஞ்சு படையில் இருந்ததாகவும் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுகாரர்களுக்கும் நடந்த வழுதாவூர்,செஞ்சி போர்களில் அவர்கள் பங்கு பெற்றதாகவும் பிரெஞ்சு ஆவண குறிப்புகள் சொல்கின்றன பிரெஞ்சு படையில் இருந்த போது ஏற்பட்ட கருத்து மோதலால் வெளியேறி கருப்பர் நகரம் என்றும் பிற்காலத்தில் மதராஸ் என அழைக்கபட்ட பகுதிக்கு சென்று குடியிருக்கிறார்
காலணி ஆதிக்க போட்டியில் இருந்த பிரெஞ்சு ஆங்கியருக்குமான ஏழு ஆண்டு போர் என்பது தங்களது கடல் வணிகத்தை தென் பகுதியில் வழுப்படுத்த தொடர்ச்சியாக இரு நாட்டு கம்பெனிகளும் கடலூர் தஞ்சை என தொடர்ச்சியாக கடல் சார்பு பகுதிகளை பிடிக்க போர் செய்தனர் அது மூன்று கர்நாடக போர்களுக்கு வழி வகுத்தது பிரெஞ்சுக்காரர்கள் 17 58-ல் சென்னையை முற்றுகையிட்டனர் ஆங்கிலேயர்களிடம் போதுமான படைவீரர்கள் இல்லாததால் மேஜர் ஜார்ஜ் கோட் துபாஷியாான முத்து கிருஷ்ணமுதலியை அழைத்து கொண்டு பெரிய பரச்சேரி பகுதிக்கு செல்கிறார்.
போரில் பங்கு பெற்று மதராஸ் நகரை காக்க வேண்டுமென பரையர்களின் தலைவராக இருந்த நல்லதம்பி பிள்ளையிடம் கோரிக்கை வைக்கிறார்
அவரின் ஒப்புதல் பேரில் பரையர் ரெஜிமென்ட் உருவாக்க படுகிறது பின்னாலில் இது மெட்ராஸ் ரெஜிமென்ட் என குறிக்க பட்டாலும் அன்றைய ஆவணங்களில் பரையர் ரெஜிமென்ட் என்றே குறிக்கபட்டுள்ளது அந்த பரையர் ரெஜிமென்டில் கலந்து கொண்ட மருதநாயகம் உள்ளிட்ட பரையர்களால் பிரெஞ்சு படை விரட்டி அடிக்க படுகிறது பரையர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களில் நஞ்சை தோய்த்து பயன்படுத்தியதாகவும் அதனால் பிரெஞ்சு படைகளால் அவர்களை எதிர் கொள்ள முடியவில்லை என ஆங்கிலேய அதிகாரி வால்ஷ்புர்க் பிரிட்டிஸ் கவர்னருக்கு அனுப்பிய அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார் மருதநாயகம் சாம்பவர்/பரையர் என நிறுவுதற்கு இதுவே வலுவான ஆதாரம் இதில் வெள்ளாளர்கள் பங்கு பெற்றதாக எந்த ஆவணமும் காணபடவில்லை
போரில் ஆங்கிலேயர்களுக்கே வெற்றி கிடைக்கிறது வெற்றிக்கு முழு காரணமான ஒரு சில பரையர்களுக்கு பதவி உயர்வும் மற்றவர்களுக்கு நிலமும் வீடும் வழங்க படுவதாக உறுதியளிக்கபடுகிறது அந்த பதவி உயர்வு பெற்ற பரையர்களில் முக்கிய நபரான மருதநாயகம் மதுரை கவர்னராக நியமிக்க படுகிறார்
அனைத்து பாளையக்காரர்களும் வந்து வணங்கி செல்கிறார்கள் சிவகங்கை ஜமீனை தவிர
சிவகங்கை ஜமீனுக்கு ஓலை அனுப்புகிறார் மருதநாயகம் பதிலுக்கு சிவகங்கை ஜமீனின் தானாதிபதியான தாண்டவராயபிள்ளை உன் மனைவியை சகோதரியாகவும் உன்னை மைத்துனர் ஆகவும் பாவித்து பொன்னும் பொருளும் அனுப்புவதாக பதில் ஓலை அனுப்புகிறார்
தன்னை வணங்கி செல்லாமல் திமிராக பதில் ஓலை அனுப்பியதால் சிவகங்கை ஜமீனை முற்றுகை இட போவதாக பதில் அனுப்புகிறார் மருதநாயகம் பதிலுக்கு தாண்டவராயன் சிவகங்கையை நெருங்கினால் மறவர் ஜமீனும் இந்த தாண்டவராயனும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும்
மிரட்டல் விடுக்கிறார் கொடிக்கால் கிள்ளும் சாதியான(கொடிக்கால் வெள்ளாளர்) உனக்கு படை கெட்ட தெரியாது என்றும் நீ என்னை எதிர்ப்பதா என்று ஏலனம் செய்கிறார் மருதநாயகம்.
மருதநாயகத்தை பகைத்து விட்டதால் தன்னுடைய உறவினரும் இராமநாதபுரம் சேதுபதியின் தானாதிபதியான தானுப்பிள்ளையை நாடுகிறார் இருவரும் தொன்டைமண்டலத்தை சேர்ந்த தன்னுடைய உறவினர் மூலம் ஆர்க்காடு நவாப்பை நாடுகின்றனர் ஏற்கனவே நாட்டு மக்களுக்கு வரி விதிப்பு போன்ற விடயங்களில் ஆர்க்காடு நாவாப்பின் உத்தரவு படி செயல்பட ஆங்கிலேயர் வழியுரித்தியதால் ஆர்க்காடு நவாப்பின் உத்தரவுகளுக்கு தன்னால் கட்டுப்பட முடியாது என மருதநாயகம் ஆங்கிலேயரிடம் சொல்லி விட்டதால் ஆர்க்காடு நவாப்பின் எதிப்பை பெற்றிருந்தார் மருதநாயகம்
அதற்கு பழி தீர்க்க சமயம் பார்த்து கொண்டிருந்த ஆர்க்காடு நவாப் இந்த சமயத்தை பயன்படுத்தி கொள்ள தயாரானார் மருதநாயகம் தன்னாட்சி நிர்வாகம் செய்வதாகம் தனக்கு கட்டுபடுவதில்லை என்றும் பாளையக்காரர்களின் வரி வசூலை அவரே வைத்து கொண்டதாகவும் ஆங்கிலேயருக்கு தகவல் சொன்னார் கம்பெனி நிர்வாகம் மருதநாயத்தை கைது செய்யவும் ஆனை பிறப்பித்து ஒரு படையை அனுப்பியது
சூழ்நிலையை புறிந்து கொண்ட மருதநாயகம் தன்னுடைய ஆளுகைகுட்பட்ட பகுதிகளை சுதந்திர பகுதிகளாக அறிவித்து ஆங்கிலையரை எதிர் கொள்ள தயாரானார் மருதநாயகம் மதுரையில் ஆட்சி செய்த 7 ஏழு ஆண்டுகளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலங்களும் அதற்கு பாத்திர பட்ட சத்திரங்கள் வெளி நபர்களால் ஆக்கிரமிக்கபட்டிருந்தது அதைை மீட்டு மீண்டும் நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறார் தாமிரபரணியில் அனைக்கட்டும் திருநெல்வேலி மேம்பாட்டு கால்வாய் திட்டத்தையும் வடிவமைத்திருக்கிறார் கொடைக்கானலுக்கு முதலில் பாதை அமைத்து அது சுற்றுலா தளமாக பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார் நத்தம் பகுதியில் பொது மக்களுக்கு அதிகமாக இடையூறாக இருந்த கள்ளர்களை ஒடுக்கியிருக்கிறார்
197 6-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மருதநாயகம் படைக்கும் ஆங்கிலேய படைக்கும் போர் மூண்டது தொடர்ந்து போர் 70நாட்களுக்கும் மேலாக நீடித்தது மருதநாயகம் பக்கம் இருபத்தி ஏழாயிரம் படைவீரர்கள் இருந்ததாலும் மருதநாயத்தை வீழ்த்துவது தொடர்ந்து சிக்கலாக இருந்ததால் ஆங்கிலேய படை பின் வாங்கி சென்றது தனது திட்டம் தடை பட்டதை என்னிய தாண்டவராயபிள்ளை இவனை விட்டு விட்டால் நவாப்பும் கம்பெனிகாரர்களுக்கும் பாளையக்காரர்கள் மத்தியில் மரியாதை இருக்காது என்று சொல்லி மீண்டும் தூபம் போட்டான்
அதே நேரம் அதிகமான துருப்புகளை ஆங்கிலேய படை திரட்டி நவாப் மும்மதலிக்கு தகவல் சொல்லியது நவாப்புடன் ஆங்கிலேய படை 19-2-17 5ல் மீண்டும் மதுரையை முற்றுகை இட்டது முகலாய சாம்ராஜ்யம் முமுவதுமாக ஆட்டம் கண்டு போன நிலையில் கர்நாடக நவாப் ஐதராபாத் நிஜாம் என தனி தனியாக செயல் பட துவங்கின ஆற்காடு நவாப்க்கான போட்டியில் பிரெஞ்சு படை சாந்தாசாகிப்பையும் ஆங்கிலேயர் முகமது அலியையும் ஆதரித்தனர்
ஆங்கிலேயரின் உதவியால் ஆற்காடு நவாப் பதவியை முகமது அலி கைப்பற்றி கொண்டிருந்தார் மருதநாயகம் முகமது அலி யை காரணம் காட்டி சாந்தா சாகிப்பின் உதவியை நாடினார் அவர் சுலைமான் என்ற தளபதி தலைமையில் ஒரு படையையும் அனுப்பி சாந்தாசாகிப் பிரெஞ்சுகாரர்களின் உதவியையும் பெற்று கொடுத்தார் பாண்டிச்சேரி தவிர்த்து அனைத்து பகுதிகளையும் இழந்த பிரெஞ்சு படை மருதநாயகத்திற்கு உதவி செய்ய முன் வந்து படை அனுப்பியது இந்த கூட்டு படையை எதிர் கொள்ள முடியாத ஆங்கியே துருப்புகள் மீண்டும் தோல்வியோடு திரும்பி சென்றனர்
மீண்டும் போர் துவங்கிய போது தற்போது சுதந்திர போராட்டக்காரர்களாக காட்டபடும் பூலித்தேவன் முதலாம் கெட்டி பொம்மு(வீரபாணடிய கெட்டி பொம்முவின் பாட்டன்) போன்றவர்கள் ஆங்கிலேயருக்கும் முகமதலிக்கும் ஆதரவாக மருதநாயத்துடன் போர் செய்ய வந்தனர் ஒரு பக்கம் பாளையக்காரர்கள் மறுபக்கம் ஆற்காடு நவா மறுபக்கம் ஆங்கிலேயர் என மூன்று கூட்டு படைகளை எதிர் கொள்ள தயாரானார் மருதநாயகம் தொடர்ந்து 22 நாட்களுக்கும் மேலாக போர் நடந்தது
மருதநாயத்தின் கோட்டையை நான்கு பக்கமும் சுற்றி வளைத்தனர் உணவு உள்ளிட்ட அன்றாடம் தேவையான பொருட்களை எடுத்து செல்ல தடை ஏற்பட்டது வீரர்கள் சோரத்து போயினர் கடைசி வரை போரிட்டு மாண்டாலும் பரவாயில்லை எக்காரனம் கொண்டும் மண்டியிட போவதில்லை என்று உறுதியாக இருந்தார் எந்த சூழ்நிலையையும் மருதநாயகம் எதிர் கொள்வார் அவரை போரில் வெல்வது கடினம் அதனால் சூழ்ச்சியால் வெல்ல சதித்திட்டம் தீட்டினர் வெள்ளாள கணக்கு பிள்ளைகள் சதி வலை பின்னுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தனர்
திருவிதாங்கூரில் ரவி வர்மனுக்கு துனையாய் இருந்து சூழ்ச்சியால் அவனையே வீழ்த்தும் அளவு துனிவு பெற்றிருந்தார் கள் எட்டு வீட்டு பிள்ளைமார். எனில் அவர்களின் மதி நுட்பத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்
தாண்டவராயபிள்ளையும் தானுபிள்ளையும் இந்த முறை மருநதாயகத்திற்கு நம்பிக்கையான சீனிவாசராவ் எனும் பிராமனரைை அனுகினர் மருநதாயகம் உடன் இருக்கும் துருப்புக்கள் ஆயுதங்கள் போன்ற விவரங்களை கேட்டனர் முதலில் மறுத்தார் சீனிவாசராவ்
ஆங்கிலேயரும் ஆற்காடு நவாப்பும் பொன்னும் பொருளும் திருநெல்வேலி பேட்டையும் பரிசாக தருவதாக உறுதி அளித்தனர் தயங்கினார் சீனிவாசராவ் சிவகங்கை ஜமீன் சார்பாக திருபுவனம் பகுதியையும் பள்ளிமடையையும் எழுநூறு குதிரையையும் தருவதாக உறுதி அளித்தார் சீனிவாசராவ் ஒப்பு கொண்டு மருதநாயகத்திற்கு மிகவும் நம்பிக்கையுரியவர்களாயிருந்த பாபாசாஹிப் சேகுகான் உள்ளிட்டோரையும் திட்டத்துக்கு உட் படுத்த மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் அவர்களிடம் அவதூறு பரப்பினார்
அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரத்தை அவர்களும் நம்பி உடன்பட்டனர்
மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்
மருதநாயகம் தொழுது கொண்டிருந்த போது துரோகிகள் மூவரும் கயிற்றால் கட்டி பட்டனர் சூழ்நிலையை அறிந்து அன்னை மாஷா ஒரு படையெடுத்து வர அதுவும் தடுத்து நிறுத்த பட்டது சிறை பிடிக்க பட்ட மாவீரன் மருதநாயகத்தை மூலைக்கரை கொத்தளம் கொண்டு சென்று தற்போதைய சம்மட்டியாபுரம் எனும் இடத்தில் 14-01-1764ஆம் நாள் தூக்கிலிடட் னர் மருதநாயகத்தை காட்டி கொடுத்த சீனிவாசராவ் இவ்வளவு நாள் மருதநாயகத்திற்கு விசுவாசமாக இல்லாதவர்கள் நாளை நமக்கும் கூட நம்பகமாக இருக்க மாட்டார்கள் என கருதி கண்களில் பச்சை கற்பூரம் வைத்து கட்டி குருடனாக்கி விட்டனர் பின்பு மருதநாயத்தை தூக்கிலிட்டனர் சில நேரம் கழித்து கயிற்றை அவிழ்த்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்தனர் பகையாளிகள், கயிற்றை அவிழ்த்து பார்த்த போது உயிருடனே இருந்தார் மருதநாயகம் மீண்டும் தூக்கிலிட்டனர் அப்போதும் அவர் இரக்க வில்லை செய்வதறியாது திகைத்தனர் மருதநாயகம் மூச்சடக்கும் வித்தை தெரிந்தவர் என பின்பே தெரிந்தது மறுபடியும் தூக்கிலிட்டு கீழே ஆழமாக குழி தோன்றி கயிற்றை வெட்டி விட்டு புதைத்தனர் மருதநாயகத்தை வீழ்த்திய பெருமையோடு சென்றவர்களுக்கு கனவில் மருதநாயகம் வந்து உங்களை மீண்டும் கருவருப்பேன் என சொல்லியதாகவும் இரண்டு முறை மூச்சடைக்கி தங்களை பயம் சொல்ல செயத மருதநாயகம் மீண்டும் எழுந்து வந்து விடுவான் என அச்ச பட்டு விடிய விடிய காத்திருந்து விடிந்ததும் உடலை தோன்டி எடுத்து தலைப்பகுதி உடல் கை கால் என தனி தனியாக வெட்டி எடுத்தனர் தலையை திருச்சி மலைகோட்டைக்கும் கைகளை தேனி பெரியகுளத்திற்கும் கால்களை திருநெல்வேலிக்கு எடுத்து சென்று புதைத்து விட்டு உடலை மதுயை சம்மட்டியாபுரத்திலும் புதைத்தனர் அதன் மேல் தற்போது தர்ஹா எழுப்ப பட்டுள்ளது உலகின் பெருவாரியான நாடுகளை வெற்றி கொண்டு சூரியன் மறையாத தேசம் வரை எங்கள் ஆட்சி என யார் தட்டி நின்ற ஆங்கிலேயர்கள் ஒரு தமிழனின் வீரத்தின் முன் நடு நடுங்கி போனார்கள் என்பது உலக வரலாற்றில் மட்டுமல்ல தமிழக வரலாற்றிலும் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டது
தகவல் திரட்டு:-
மறைக்க பட்ட பரையர் வரலாறு.
நாயக்கர் வரலாறு
வட ஆர்க்காடு ஜில்லா கையேடு(1951).
காலனியத் தொடக்க காலம் (1500-1800)எஸ்.ஜெயசீலஸ்டீபன்.
கான்சாஹிப் சண்டை
நா.வானபாமாலை.
The viev of the English Interests in India
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக