சனி, 4 ஏப்ரல், 2020

வன்னியர் வரலாறு ... History Of Vanniyar


வன்னியர் வரலாறு ... History Of Vanniyar 

வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர் (Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும் வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர்.இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம் மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.இவர்கள் முன்னொரு காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர்.

வன்னியர் அல்லது வன்னிய குல சத்திரியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
வட தமிழகம், புதுச்சேரி
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்

சொற்பிறப்பு

வன்னியருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துகள் உள்ளன, சமசுகிருதத்தில் வன்னி என்னும் சொல்லுக்கு (நெருப்பு/தீ) என்று பொருள் மற்றும் திராவிடத்தில் (வலிமை) என்பதாகும்.அதாவது நெருப்பிலிருந்து (அக்னி/தீ) பிறந்தவர் என்று பொருள்படும். பள்ளி என்னும் சொல்லுக்கு சமசுகிருதத்தில் வனம் (காடு) என்பதாகும்.

வன்னி என்னும் பெயரிலிருந்து வன்னியர்கள் தங்கள் சாதி பெயரைப் பெறுகிறார்கள் என்று அல்ஃப் ஹில்ட்பெடில் குறிப்பிடுகிறார். வன்னி என்ற வார்த்தை சமசுகிருத மொழியில் நெருப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் இது ஒரு முக்கியமான மரத்தின் பெயராகும். இது முனிவரின் தொடர்பு, மேலும் புராணங்களுடன் தொடர்புகளுக்கு இது வழிவகுக்கிறது.

வன்னியர் குல பட்டங்கள்

படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர், கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 500க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் ஆவார்.

வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது. வன்னி மரம் தல விருட்சமாக, தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

பிற பெயர்கள்

இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர். அதில் வன்னிய குல சத்திரியர், வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் போன்ற பிற பெயர்களும் அடங்கும்.

வன்னியர் புராணம்

இந்தியாவில், புராணம் கொண்ட ஒரே சமூகத்தினர் வன்னியர்கள் ஆவர். இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் என்னும் வன்னியர் புராணத்தில், இவர்களின் தோற்றம் பற்றி கூறப்பட்டுள்ளது.

தூர்வாசகர் முனிவருக்கும், கஜமோகிணிக்கும் இரண்டு அசுர குழந்தைகள் பிறந்தனர். அவர்களின் பெயர் "வில்வலன்" மற்றும் "வாதாபி" இவர்களின் தாயாரான கஜமோகிணி என்பவள் முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபத்மனின் இளைய தங்கை ஆவாள். வில்வலனும், வாதாபியும் அகத்திய முனிவரை துன்புறுத்த ஆரம்பித்தான். இதனால் கோபம் அடைந்த அகத்திய மாமுனி வில்வலனை விழுங்கி விட்டார். உடனே வாதாபி சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல சக்திகளையும் பெற்றான். அந்த வலிமையின் மூலம் தெற்கு கடற்கறையின் மைய பகுதியில் அமைந்திருந்த ரத்னாபுரியை அரசால ஆரம்பித்தான். பின்னர் மாயனின் மகளான சொக்கன்னியை மணந்தான். இவன் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அசுர குருவான சுக்ராசாரியார் துணை இருந்தார். பின்னர் வாதாபி தேவர்களை அதிகம் துன்புறுத்த ஆரம்பித்தான். இதை கண்ட நாரதமுனி, சிவபெருமானிடம் தேவர்களின் இன்னல்களை கூறினார். அதேசமயம் சம்பு மகரிஷி சிவபெருமானை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது சம்பு மகரிஷிக்கு சிவபெருமான் அருள்பாவித்து, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, வியர்வைத் துளியை (நீர்) அந்த யாகத்தில் விழச்செய்தார். யாகத்தில் விழுந்த அந்த நெருப்பில் இருந்து, வெள்ளை குதிரையில், கையில் வீரவாளுடன் தலையில் கிரீடத்துடன் ஸ்ரீ வீர ருத்ர வன்னியர் தோன்றினார். சிவபெருமானும், தாய் பார்வதியும் தேவேந்திரனின் மகளான மந்திரமாலையை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு நான்கு வீர ஆண் மகன்கள் பிறந்தனர். அவர்களின் பெயர் 1.கிருஷ்ண வன்னியர் 2.பிரம்ம வன்னியர் 3.சம்பு வன்னியர் 4.அக்னி வன்னியர் ஆவார்கள். இவர்களுக்கு காந்தா (சுசிலா) என்னும் துறவியின் நான்கு மகள்களையும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் பெயர் இந்திராணி, நாரணி, சுந்தரி, சுமங்கலி ஆகியோர்கள் ஆவர். வாதாபி அரக்கனை அழிக்கப் புறப்படும்போது அவருடைய மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை. போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இக்கதை வன்னியக்கூத்து என்ற பெயரில் இன்றும் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் கூத்தாகவும் நடத்தப்படுகிறது. ஸ்ரீ வீர ருத்ர வன்னிய மகாராசனின் வழித் தோன்றல்களே வன்னியர்கள் என வன்னியர் புராணம் கூறுகிறது.


பங்குனித் திங்களுத்திரர் தன்னில் பரமன்
முக்கணழல் விழியில்
துங்கமா வேர்வை தோன்றிடக் கரத்திற் தோய்த்து
செங்கழுநீரின் மலரைப்
பொங்கமா மகத்திலாகுதி யியற்றிட
புனிதனுக்கு வகையீந்தார்
(வ)ங்கண் வீரவன்னிய பூமன்னர்
பரிமீது தோன்றினனே
— வன்னியர் புராணம்.
சிலை எழுபது
கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். இந்நூலில் வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார்.

படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ
வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய
நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார்
மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப் படையுடையார்
வன்னியர் பிறரென்னுடையார் பகிரிரே
— சிலை எழுபது.
மக்கள் தொகை
தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில், இவர்களே மிகப்பெரிய சமுதாயத்தினர் ஆவர்.

தற்போது

வன்னியர்கள் 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தனர். குறிப்பாக செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் இருந்தனர். வன்னியர்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் அமைப்பிலிருந்து பெருமளவில் பயனடைகிறார்கள். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த இவர்கள், 1980 ஆம் ஆண்டுகளில் பல போராட்டங்களைத் தொடர்ந்து, அதில் வெற்றிக் கண்டு தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளனர்.

இந்த சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக வளர்ந்து, தமிழகத்தில் தற்போது முக்கியமான அரசியல்கட்சிகளில் ஒன்றாக உள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்கள்

எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார் - தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி நிறுவனர்
மாணிக்கவேலு நாயக்கர் - தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர்
ச. இராமதாசு - பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்
காடுவெட்டி குரு - வன்னியர் சங்கத் தலைவர் மற்றும் தமிழக அரசியல்வாதி
வீரபாண்டி எஸ். ஆறுமுகம் - தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர் (திமுக)
வாழப்பாடி ராமமூர்த்தி - தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர்
மதுராந்தக ஆறுமுகம் - தமிழக அரசியல்வாதி (திமுக)
செஞ்சி என். இராமச்சந்திரன் - தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர்
துரைமுருகன் - தமிழக அரசியல்வாதி மற்றும் திமுக பொருளாளர்
ந. ரங்கசாமி - புதுவையின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கட்சி நிறுவனர்
கே. பி. முனுசாமி - தமிழக அரசியல்வாதி (அதிமுக)
சி. வி. சண்முகம் - தமிழக அரசியல்வாதியும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர்
எஸ். ஜெகத்ரட்சகன் - தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர் (திமுக)
குத்தாலம் பி. கல்யாணம் - தமிழக அரசியல்வாதி (திமுக)
அன்புமணி ராமதாஸ் - முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி தலைவர்
தி. வேல்முருகன் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்
#வன்னியர்_வரலாறு #Vanniyar_History



வன்னியர் வன்னியர் குல சத்ரியர் வரலாறு

சத்ரியர் பட்டம் தமிழகதில் வன்னியர்களுக்கு மட்டுமே உள்ளது 

சேர சோழ பாண்டிய பல்லவ சாளுக்கிய , களப்பிர , சம்புவராய, கடையாழு வள்ளல்கள்,நாயக்கர்,வேளிர் . வழிவந்தவர்கள் என்றும் அழைக்கபடும் ஒர் மூத்தகுடி வன்னியர் குடியாகும் 

மேலும் இவர்கள் இந்தியாலே நேரடிய சத்ரியர்கள் என 18 புராணங்களில் 9 வது புரானமான அக்கினேயபுராணம் மிக விரிவாக கூறுகிறது. 

இந்தியாவில் முதல் சத்ரியரே வன்னியர்கள்தான் முதல் அரசன் வீர வன்னியன் மட்டுமே என இப் புராணம் கூறுகிறது. 
இது உண்மையே வன்னியரின் ஆட்சி செய்த முதல் இடம் இன்று கடலில் மூழ்கியுள்ள குமரிகண்டமே (லேமூரியா )இதுவே முதல் மானிடன் தோண்றிய இடம்மாகும் 

இங்கே 30,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, முதல் ,இடை, சங்கங்களை பாண்டியவன்னிய மன்னர்கள் நிறுவி தமிழ் வளர்தனர் 

அழிந்த குமரிகண்டம் முதல் கென்டு சிந்து சமவெளிக்கு அப்பால் ஆப்கானிஸ்தான் வரையிலும் சீனா மற்றும் ஈரான் வரையிலும் ஆன்டவர்கள் வன்னியர்கள் இவர்கள் இன்றும் தங்களை பாண்டவர் , இராமன் , மூவேந்தர் வழிவந்தவர் என்றே அழைக்கப்படுகின்றனர் வன்னியர்களை நவகண்ட நாயகர் எனவும் அழைப்பர் 

இதில் தென் இந்தியாவில் உள்ளவர்களை பற்றி மட்டும் பார்போம் 

வன்னியர்கள் 

1 அக்கினேய குல சத்ரியர் 2 சிவன்குலம் 3 சம்புகுலம் 

4 தீகுலம் 

5 தர்மராஜாகுலம் 6 கர்ணன் குலம் 7 வன்னியசத்ரியர் 

8 மறவர்குலம் 

9 தீக்குலத்தோர் 10 பாரதகுலம் 11 இரகு குலம் 

 12 சூரியகுலசத்ரியர் 13 சந்திரகுலசத்திரியர் 14 இந்திர குலம் 15 அம்சி குலம் 16 ஆணாற்புதல்வன் அக்னிபுத்திரன் 18 குருகுலவம்சம்  19 திகளர் குல சத்ரியர்

எனபல ஆயிர எண்ணில் அடங்கா குலமாகவும் கோத்திரமாக உள்ளனர் . இவர்களை ஒன்றினைப்பது மாகபாரத விழா ஆகும் 

வன்னியர்களின் கோத்திரம் 

வன்னியரின் பிரிவுகள் 

கிருஷ்ண வன்னியர் 

ஜம்பு வன்னியர் 

பிரம்மவன்னியர் 

கங்கவன்னியர் 

அரசபள்ளியர் 

வன்னியர்களின் கோத்திரம் 

கிருஷ்ண வன்னியர் 

1)மத்ம , 2)ஜம்பு, 3)பிருகு, 4)சத்ய,5)சாத்தியா, 6)நித்திய. 

7) சதிய 

ஜம்பு வன்னியர் 

ஜம்பு , 2)முனிவர், 3)நிர்மல. 

பிரம்மவன்னியர் 

1)பரம , 2)வசு, 3)வன்ய , 4)தனஞ்சய,5)கிருஷ்ணன் 

கங்கவன்னியர் 

1)கந்தர்வ,, 2) கமன்டல,, 3)கௌமாரி,, 4)நள , 5)கந்தோத்திரம் . 

அரசபள்ளியர் 

1)வீர, 2)விஜய , 3)தாரா , 4) ததி.



தமிழகவன்னிய அரசர்கள் 

1 அதியமான்

2 சேரன்

3 சோழர்

4 பாண்டியர்

5 பல்லவர்

6 கங்கர்கள்

7 சாளுக்கியர்

8 மழவராயர்

9 மலையமான்

10 வாணர்

11 சம்புவராயர்

12 காடவர்

13 வேளிர் 
ஆகிய அரசர் வழிவந்தவர்கள் வன்னியர் ஆவர்


பட்டபெயர்கள் 

1)வேணாட்டரசன் 2)வேட்டைக்காரார், 
3)முத்தரையர்,4)பள்ளி, 5)வாணகோவரையர், 6)வேள், 7)ஆய்,8)ஆஅய்,9)வேளிர், 
10)வேள்மான், 11)வேளிமான், 12)வேளியன்,13)வேளார்,14)தேவன்,15) நாடார், 16)உடையார், 17)மூவேந்தன், 18)மூவேந்தவேளார், 19)உடையான், 20)ஒலைநாயகம், 21)சோழ மூவேந்தன் , 22)ஒலை நெறியுடையான் 23)சோழனார் 24)ஒலை மீனவன் மூவேந்தன் ,, 25)சோழங்கர் , 26)நாற்பத்தெண்ணாயிரன் , 27)வீரன் 28)வேகம்பன் ,29) வேடர், 30) அரச குல வேளிர், 31)எழ்வர் வழி,, 32)தொண்டைமான், 33)திரையன் வம்சம், 34)வேளியன் 35)வேண்மாள்,36)வேளாவிக் கோமான், 37)வேண்மாள் , 38)வானகோவரையர், 39)எருமையூரான் ,40)வடுகர்பெருமாகன், 
41) அதியமான், 42)மலையமான், 43)ஆஆய் எயின்ன், 44)பாணன், 45)பறம்பிற்கோமான், 46)பாரிவேள்,47)மல்லன்,48)விச்சிகோ, 49)வஞ்சியர், 50)கோற்கையார், 51)கொடைபுறிந்தோர்,52)ஆவியர்,53) ஆவினங்குடி, 54)பெருங்கல்நாடன், 55)கண்டிரக்கோ, 56)மலைநாடன், 57)விச்சிக்கோவினர், 58)அதியன்,59) அதிகன். 60)எழினி, 61)மழவர் பெருமகன், 62)மாறன், 63)அதியர் கோமான், 64)வானவன், 65)தேவர், 66)மழவர்கோமகன்,67)மழவராயர், 68)அஞ்சியோர், 69)செம்பியர், 70)ததியர், 71)மறவர், 72)நாயனார், 73)வாணராயர், 74)தேவன்,75) காரணகையான்கள், 76)வர்மா, 77)வர்மன், 78)வல்வில்லனார்,79) வேடான், 80)கொல்லி மழவர், 81)பல்லாண்டான், 82)சேதியார், 83)சேதிராயன், 84)மலையன், 85)மலையகுலராஜன், 86)கோவலராஜன், 87)வன்னியனாயன், 88)வன்னிய தேவேந்திரன், 89)ராஜராஜர், 90)வன்னியனார், 91)மனபரணர், 92வயவர் பெருமகன்,93) எயினர், 94)குறும்பூடையான், 95)எயினன், 
96) குறுந்தொடியார், 97)பல்லவர், 98)தொங்கர்,99) சேரலர், 100)ஆய்வேள், 101)குறும்பர், 102)தாவேட்டுடாயன், 102)பன்றியன், 103)புளியனேன், 104)ஊரழிப்பன்,105) வேட்டுவர், 106)வேட்டைக்காரர் , 
107) வஞ்சி முத்தரையன், 108)வடுகு முத்தரையன், 109)சோழ முத்தரையன், 110)குறும்பினன்,111)மிழலைவூரான் 112)நிழல்வூரான், 113)நிடுருரான். 114)எவ்வியர், 115)இருங்கோவேள், 116)துவாரகைவேள்,117) துவாரகை வழி, 118)துவாரகை வாசன் , 119)பூரியர், 120)துவாரைக்கோமான், 121)ஒய்மான், 122)சம்பு குலத்தான் , 123)நல்லியாதன், 124)வில்லியாதன்,125) நாகர், 126)பல்லவதரையார், 127)காலிங்கராயர், 128)களப்பரர், 129)காடவராயர், 130)நுளம்பர், 131)நுளம்ப பள்ளி, 132)களப்பிரர் , 133)கள்வர் , 
134 கள்ளர், 135)மோரியர்,136) கொற்றன்,138) வானவன்,139) மறவன், 140)குறும்பூரன்,141) குடகோ,142) பண்ணண்,143) பண்ணாத்தியன்,144) தித்தர், 145)பெரியன்குலம், 146)பொறையாற்றுக்கோமான், 147)நாஞ்சில் வள்ளுவன், 148)பொருநள்,149) அவியன்,150) அவியர், 151)காரியாதியன்வளவர் , 152)சோழிங்கர்,153) சோழியஎனாதியர்த திருகுட்டுவனார் , 
154 அழூம்மிலிலார், 155 குறவர் பெருமகன்,156)கங்கர்,,157) கட்டியார், 158)மலைநாடன்,159) சேரநாடன்,160) சோழநாடன்,161) பாண்டியநாடன் , 162)தேசிங்கர்,163) கோய்மான், 164) தேயன்குடி,165) முவன்குலம், 166)எழினியங்கார்,167) ஆதன்,168) தோன்றிக்கோன்,169) அந்துவன் , 170கிரன், 171)தந்துமாறன், 172)தருமபுத்திரன், 173)வாணராஜன், 
174) வாணகோவரையார்,175) பல்லவமல்லன்,,176) மத்தியர், 
177)பரதவர் கோமான், 178)வாணன், 179)விராஅன் அழிசியர்,180) அருமன், 181)சொல்லியக்கோமன்,182) தழபன்,183) ஆயர்கோமான்,184) கடலன், 185வேங்கை மார்பன், 186) பிண்டர், 187) அறுவகையனார், 
188) கொடுமுடியைன், 189)வோம்பியர்,190) மும்முடியார்,191) முடியார், 192)காஞ்சியர்,193) தேற்கத்தியர்,194)தொல்குடியார்,195) குடியாணவன், 196)குடியான்டவர், 197)படையான்டவர்,198) படையாச்சி, 199)இந்திரனார் , 200)இமயவரம்பன்,201) எவ்வியார் வழுதியார் ,202) குமரனார்,203) வளவன் , 204)கொங்கர்,205) கோசனார், 206)கோசர் கோமான், 207)செம்பியன், 208)சேரலாதன்,209) சேரமான், 219)சோரல். 211)சேரன், 212)சோழன்,213) நம்பி, 214)நல்வழதியார்,215) நால்வகையார்,216) நீலன்,218) பசும்பூன் பாண்டியன், 219)பரதன்குலம்,230) நம்பியார்,231) செழியன்,பெருவழுதி, 232)நன்மாறன், 234)சடையன் வர்மன்,235) வர்மர்,236) சடைவர்மன்,237) வானவர்கள், 238)மறையோன், 239)மாலைமாறன், 249)மலைமாறன்,243) இரும்பொறை, 244 கடம்பூரான் 245 கள்ளர் 246நாகர்கள் 247 தொண்டைமான் 
248 ) பல்லவராயர்,249)சேதிராயர் 250) காடவராயர் காடவாராயர் "வன்னியர் 253 மேல்கொண்டான், 254 சோழங்கன்,255 சோழகங்கன், 256 நாடாள்வார்257 சோழர்கள் 
258 மழவராயர்259 ,பழுவேட்டரையர்260 ,மலையமான், 261தஞ்சைராயர் 262 தஞ்சைக்கோன்263 பழையாறுகொண்டார் 264)பழுவேட்டரையர் 265) புலிக்கொடியோர் 266) வல்லக்கோன் 267)வல்லத்தரசர் 268) வாணாதிராயர் 279) வண்டைராயர் 270)வைதும்பர் 271) வைதும்பராயர் 272)காடவராயர் 273)கொடும்பாளுர்ராயர்
274) உறந்தையர்,275)அடங்காப்பிரியர்276உறந்தையாண்டார் 278)அருண்மொழித்தேவர்.279) ஈழங்கொண்டர் 280) இருங்கோளர் 281)கச்சியராயர் 282)கொங்குராயர் 283) கங்கைநாட்டார் 284)கோட்டையாண்டார் 285)கலிங்கராயர் 286)கோனெரிமேல்கொண்டார் 287)கலிங்கராயதேவர் 288)சோழகங்கநாட்டார்,289) செம்பியமுடையார்290) சோழகேரளர் 291)சோழன்292) சோழகங்கர் 293) கேரளாந்தகன் 294) சோழதேவர் 295)சோழகங்கதேவர் 296) சோழங்கர், 297 ) செம்பியமுடையர் 298)சோழகோன் 299) சோழாட்சியார் 300) சோழபாண்டியர் 301)சோழராசர் 302) சோழரசர் 303)சம்புவராயர் 304)சோழநாயகர் 305)சோழபல்லவர் 306) சேரமுடியர் 307) சேனாதிபதி 308)சேனைத்தலையர். 309) மும்முடிதேவர் 310)மும்முடி சோழனார் , 311சழனார்,312 தொண்டைமான், 313சோழனார்,314 சேரனார் ,315படையாட்சி 316 பாண்டியனார், 317அஞ்சாத சிங்கம் 318அதியர் 319ஆறுமறையார் 320.அன்பனார். 321 அண்னலங்காரர் 322 .ஆண்டுகொண்டார் 323அஞ்சாத சிங்கம் 324 .பள்ளி 325 .படையாண்டவர்326 துரைகள் 327 ஜெயப்புலியார் 328.புலிக்குத்தியார் 329.முனையரையர் 330 .முத்தரையர் 331 மானங்காத்தார் 332வாணத்தரையர்333 தேவர்தொண்டைமான் 334 தொண்டாம்புரியார் 335 336ஞானியார் 337 ஒய்மான் 338 .சேத்தியார் 339 .வாண்டையார் 340 முதன்மையார் (முதலியார்) 341நன்மையார் 342 .வணங்காமுடியார் 343 .நாயகர்(நாயக்கர்) 344காலாட்கள் 345தோழ உடையார் 346 .சற்றுக்குடாதான் 347 .ரெட்டியார் 348கவுண்டர் 349கண்டர்350 .வீரமிண்டர் 351 வன்னியனார் 352 .ரெட்டைக்குடையார் 353 .சேரனார் 354.சோழனார்(சோழங்கனார்) 355 .சோழகங்கர் 356 .வல்லவர் 367 .அரசுப்பள்ளி 358.பாண்டியனார் 359 .பரமேஸ்வர 360வன்னியனார் 361.நயினார் 362.நாட்டார்(நாட்டாமைக்காரர்) 363 .பல்லவராயர் 364 .காடவராயர் 365 .கச்சிராயர் .366சம்புவராயர் 367 காளிங்கராயர் 368 .சேதுராயர் 369 தஞ்சிராயர் 370 .வடுகநாதர் .371பாளையத்தார்(பாளையக்காரர்) 372 .சுவாமி 373 .செம்பியன் 374 .உடையார் 375.நரங்கிய தேவர்376 .கண்டியதேவர் 377 .சாமர்த்தியர் 378 .சாளுக்கியர்379 சாமந்தர் 380.பல்லவர் 381 .பண்டாரத்தார் 382 .தந்திரியார் 383 .ராஜாளியார் 384 .கங்கண 385உடையார் 386 .மழவராயர் 387 .மழவர் 388 .பொறையர்(புரையர்) 389 .பூபதி 390பூமிக்குடையார் 391 .ராயர் 392 .வர்மா 393.படையாட்சி 394 .காசிராயர் 395 ராய ராவுத்த மிண்டார் 396 .மூப்பனார் 397 .வள்ளை(வள்ளல் என்பதன் மரூஉ) 398பின்னடையார் 399 சேனைக்கஞ்சார் 400 .பரிக்குட்டியார் 401 .சேர்வை 402கொங்குராயர்403 .கட்டிய நயினார்.404 .கிடாரங்கார்த்தவர் 405 .சமுட்டியர் 406.ஷத்திரியக்கொண்டார் 407 .மருங்குப்பிரியர் 408 .பண்ணாட்டார் 409.கருப்புடையார் 410நீலாங்கரையார் 411 .கடந்தையார் 412.வில்லவர் 413 .கொம்பாடியார் 414.தென்னவராயர் 415 வண்ணமுடையார். 416 .செட்டிராயர்(செட்டியார்),417 .மேஸ்திரி, 418.வேளிர், 419 .தேசிகர், 420 .நரசிங்கதேவர்,421 .காடுவெட்டியார்,422 .உருத்திரனார், 423.,வானதிராயர்,
424.செங்கழுநீரர், 425ஆணைகட்டின பல்லவராயர் 426.கரிகால் சோழனார், 427.கங்கரையர், 428 .வெற்றிக்களித்த வீரமிண்டார் 429 களவென்றுடையார், 430.படையெழுச்சியார்,431 .களத்தில் வென்றார் 432 .தொண்டையர்(தொண்டலார்) 433.நாயக வர்மா 434 .பிடாரியார்.. 435 காடுவெடியார் 436 குடகுநாடான்,437 காஞ்சி மன்ன்ன், 438மலைநாடான் , 439இராசகுலம், 440நாகமலையான்441 இராசபோச,442இராசபோசர்,443 இரும்புதலை ,444 கள்ளர் ,445 கள்வர் ,446வீரகுடிமறவர், 447சேர்வை , 448துளுநாடன், 449 கிழ்மல்லர் ,450மேல்மல்லர் , 451பாண்டியமன்னர் நாடாள்வார், 452சட்டபள்ளியன் , 453குணகுடியான் ,454 உறவநாடான் , 455நாகமலையான் , 456குலசேகரன் ,457 இரணியவர்மன் ,458 ருத்ரவன்னியர் ,459கய்வன்னியர் ,460விரம்புவன்னியர் , 461நயினார் , 462இந்திரவன்னியர் , 463சூரியவன்னியர் , 474சந்திரவன்னியர் , 465அக்னி, 466அகமுடையான் ,467அகமுடையார் , 478 அரசு , 469சத்திரியர் , 470 நாகபடம் , 471நத்தமான் ,472 ஒலை,473 பந்த முட்டு,474 கள்ளங்கி ,475 கள்ளவேலி , 476அஞ்சுநாள் , 477பன்னிரண்டு நாள் ,478 வனப்பள்ளி , 479 மீனபள்ளி , 480பாணபள்ளி , 481கோவிலார் , 482வலக்காரர் , 483வடமரக்காடு , 484எடகுலம் ,485 ஜம்புகுலம் ,486சூரியபிரியன் , 487தொல்வட்டான் , 488வான்னாறுத்தான் ,489 பாம்பறுத்தான் , 490பள்ளிகட்டராயர் ,491வன்னிகிழான் ,492வன்னியுடையான் , 493வன்னிபுரமுடையான் , 494சம்புகன் , 495விர வில்லிசயனார் ,496ராஜர் ,497 படையாண்டவர் ,498படைவெட்டியார் , 499சோழனார் 500 சோழங்கனார் 501 கவுன்டர் 

வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்த சில பாளையங்களும் அவர்களின் பட்டங்களும். 

1. பிச்சாவரம் - புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்பசூராப்ப சோழனார். 

2. முகாசா பரூர் - கச்சிராவ் ( கச்சிராயர்) 

3. அரியலூர் – மழவராயர் 

4. உடையார் பாளையம் - காலாட்கள் தோழ உடையார். 

5. ஊத்தங்ககால் - பரமேஷ்வர வன்னிய நயினார். 

6. கீழூர் - பாஷா நயினார் 

7. செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்) 

8. காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலைகண்டியத் தேவர். 

9. விளந்தை – வாண்டையார், கச்சிராயர் 

10. பெண்ணாடாம் – கடந்தையார் 

11. குன்ணத்தூர் – மழவராயர் 

12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர். 

13. பிராஞ்ச்சேரி - நயினார் 

14. தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி 

15. நெடும்பூர் – வண்ணமுடையார் 

16. கடம்பூர் – உடையார் 

17.ஓமாம்புலியூர் – வண்ணமுடையார் 

18. குண வாசல் – வண்ணமுடையார், உடையார் 

19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார். 

20. நந்திமங்கலம் பூலாமேடு – மழவராயர் 

21. கிளாங்காடு - சேதுவராயர் 

22. கல்லை – நயினார் 

23. நயினார் குப்பம் - காங்கேய நயினார் 

24. திருக்கணங்கூர் - கச்சிராயர் 

25. தியாகவல்லி நடுத்திட்டு – கச்சிராயர் 

26. ஆடூர் - நயினார் 

27. மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர் 

28. சோழங்குணம் – முதன்மையார் 

29. வடக்குத்து - சமஷ்டியார் 

30. வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார் 

31. ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர் 

32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம் 

33.முடிகொண்ட நல்லூர் – உடையார் 

34. கடலங்குடி - ஆண்டியப்ப உடையார் 

35. வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார் 

36. கு றிச்சி - உடையார் 

37. செல்லப்பன் பேட்டை – சோழனார் 

38. சோத்தமங்கலம் - வாண்டையார் 

39. கோடாங்க்குடி – சம்புவராயர் 

40. சென்னிய நல்லூர் - சம்புவராயர் 

41. கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார் 

42. இடைமணல் – நயினார் 

43. சுவாமிமலை – தொண்டைமான் 

46. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார் 

47. விடால் – நாயக்கர் 

48. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார் 

49. கருப்பூர் - மழவராயர் 

50. காரக்குடி – மழவராயர்

சான்றுகள் 

ARE__ANNUAL REPORT ON INDIAN EPIGRAPHY 

AYYAKKANNU , VANNIKULU VILAKKAM 

CHHABRA, B.CH. EXPANSION OF INDO-ARYAN CULTURE DURING PALLAVA RULE 

EPIGRAPHIA INDICA VOLUMES , 

Nagaswamy , R.THIRUTHANI and velenjeri copper plates, the state department of arcgaeology government of tamilnadu ,1979. 

Quaritch wales. H.G. TOWARDS ANGKOR. 


S.I.I -SOUTH Indian inscriptions volumes. 

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

11 கருத்துகள்:

  1. நான் வன்னியர் என்பதில் பெருமை அடைகிறேன்

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பான அறிமுகம். தகவல்களில் மிக தெளிவான தேர்வு, அமைப்பு...

    பதிலளிநீக்கு