இந்தியாவின் பழமையான பித்தளை நகரம் எது தெரியுமா?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் மொராதாபாத்தின் வரலாறு 1600-ம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரால் இந்த நகரம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பித்தளைப்பொருட்கள் தயாரிப்பில் இந்நகரம் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. எனவே பித்தளை நகரம் என்ற சிறப்புப்பெயரும் இதற்கு உண்டு. இந்த நகரத்தின் வரலாறு பற்றியும், சுற்றுலா பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
1632ம் ஆண்டில் ஷாஜஹான் மன்னர் ருஸ்தம் கான் எனும் தளபதியை இப்பகுதியை கைப்பற்றி ஒரு கோட்டையையும் நிர்மாணிக்குமாறு கட்டளையிட்டு அனுப்பியுள்ளார். முதலில் ருஸ்தம் நகர் என்று அழைக்கப்பட்ட இந்நகரம் பின்னர் ஷாஜஹான் மன்னரின் மகனான மொராத் என்பவரின் பெயரால் மொராதாபாத் என்று அழைக்கப்படுகிறது.
கைவினைப்பொருட்களுக்காக புகழ் பெற்றுள்ள இந்த நகரத்திலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நகரத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் வால்மார்ட் மற்றும் டெஸ்கோ போன்ற பிரபல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பித்தளைப்பொருள் உற்பத்தி மட்டுமன்றி மொராதாபாத் நகரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் நிறைந்துள்ளன. எல்லா இந்திய நகரங்களையும் போலவே இங்கும் கோயில்களும் ஆன்மீக வழிபாட்டுத்தலங்களும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக