வியாழன், 2 ஏப்ரல், 2020

பட்டு மற்றும் வெள்ளியின் நகரமான சேலத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க....!!

பட்டு மற்றும் வெள்ளியின் நகரமான சேலத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க....!!


சேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்” என்றும் அழைக்கப்படுகின்றது. மாநிலத்தின் ஐந்தாவது பெரிய நகரமான இது, மாநகராட்சி மன்றமாக விளங்குகிறது.இந்நகரின் பெயர் “சேரம்” என்ற சொல்லில் இருந்து வந்ததாகவும், இம்மண்டலம் “சேரம்” நிலத்தின் ஒரு பகுதியாக விளங்ககியதனாலேயே இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. முற்காலத்தில், இவ்வூர் மக்கள் பெண்களின் உடையாகிய சேலை நெய்வதை தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். இந்நகரின் பெயர் “சேரம்” என்ற சொல்லில் இருந்து வந்ததாகவும், இம்மண்டலம் “சேரம்” நிலத்தின் ஒரு பகுதியாக விளங்ககியதனாலேயே இப்பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. முற்காலத்தில், இவ்வூர் மக்கள் பெண்களின் உடையாகிய சேலை நெய்வதை தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர்.சேலத்திற்கு பயணிப்பது மிகவும் எளிதாகும்; ஏனெனில் இது வான், ரயில் மற்றும் சாலை வழிப் போக்குவரத்து சேவைகளினால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்திலிருந்து நாட்டின் மற்ற நகரங்களுக்கும், உலகின் பல பகுதிகளுக்கும் விமானங்கள் உள்ளன. சேலம் ரயில் நிலையம் ஒரு முக்கியமான ரயில் சந்திப்பாகும். இங்கிருந்து, நாட்டின் எல்லா முக்கியமான பெருநகரங்களுக்கும், சிறுநகரங்களுக்கும் ரயில்கள் உள்ளன. ஏராளமான பேருந்துகள், சேலத்திலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.சேலத்தில் வெப்ப மண்டல வானிலையே பெரும்பாலும் நிலவுகிறது. இங்கு செல்வதற்கு, நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலமே சிறந்ததாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக