சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..!
குற்றாலத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செந்தூருணி வனவிலங்கு சரணாலயமும், தென்மலை சூழ்நிலை சுற்றுலாத் தலமும். அடர் பசுமைக் காடாக காட்சியளிக்கும் இந்த இரு இயற்கை சுற்றுலாத் தலங்களுமே பயணிகளில் பெரும்பாலான விருப்பமாகவும் உள்ளது. குற்றாலம் வரும் யாரும் இப்பகுதியை தவர விடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செந்தூருணி என்ற சொல் செங்குருணி என்ற இப்பகுதிக்கே சொந்தமான ஒரு அரிய வகை மரத்தின் பெயரிலிருந்து மருவி அழைக்கப்படுவதாகும். செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது. செந்தூருணி, குழத்துபுழா நதிக்கூடங்களில் கட்டப்பட்டுள்ள பாராப்பர் அணைகட்டின் விளைவாக 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. இந்த அணையின் கட்டுமானத்தினால் மேலும் 23 கிலோ மீட்டர் சதுர வனப்பகுதி சரணாலயத்துடன் இணைந்துள்ளது.
செந்தூருணி பள்ளத்தாக்கு இந்த மாற்றத்திற்குப் பிறது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தகுந்த பகுதியாக செந்தூருணி பள்ளத்தாக்கு பகுதியை கொல்லம் வனச்சரக கமிட்டியின் சிபாரிசின் பேரில் கேரள அரசு செந்தூருணியை வனவிலங்கு சரணாலயமாக 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் அறிவித்தது. தற்போது இந்த வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம் வனவிலங்கு கோட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயம் 100.32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் செல்ல தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து கேரள செல்லும் அனைத்து தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகளில் தென்மலை கல்லடா அணைக்கட்டு வரை செல்லலாம். ரயில் மூலம் செல்ல விரும்புவோர் செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் ரயிலில் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதிக்கு பேருந்து மற்றும் ஜீப் மூலம் சென்றடையலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக