அரசர்களின் துறைமுகமாக திகழ்ந்த ஊரான ரீபந்தர் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க....!!
கோவா தலைநகர் பனாஜியின் புறநகர் பகுதியான இல்ஹாஸ் மாவட்டத்தில் ரீபந்தர் நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தின் பெயரில் உள்ள பந்தர் என்ற சொல்லுக்கு அரசர்களின் துறைமுகம் என்று பொருள். இங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வரும் தொன்மையான தேவாலயங்கள் இன்றும் இந்த நகரத்தின் பாரம்பரிய பெருமைகளுக்கு சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன.மேலும் இந்த நகரத்தில் உள்ள கோவா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் உலகப் பிரசித்திபெற்றது. ரீபந்தர் நகரம் எப்போதும் வணிகமயமாக்கலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது. இதன் காரணமாகவே இந்த நகரம் மற்ற கோவா பகுதிகளுக்கு மாறாக இயற்கை அழகு மிக்கதாக திகழ்கிறது. இந்த நகரத்தை மாலை வேளைகளில் அருகிலுள்ள பாலங்களில் இருந்து பார்த்து ரசிக்கும் அனுபவம் அப்படியே உங்களை சொக்கவைத்து விடும்.மேலும் இந்த நகரம் புகழ்பெற்ற கோவான் மதகுரு ஏண்டோனியோ ஃபிரேன்சிஸ்கோ சேவியர் அல்வேரெஸ் என்பவருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது. ரீபந்தர் நகரம் மாண்டோவி நதியின் கரையில், பனாஜி நகரையும், மாண்டோவியையும் இணைக்கும் நதியின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் இந்த நகத்தை அடைவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை.அதோடு இந்த நகரம் பெரிய பெரிய பாலங்கள் மூலம் கோவாவின் மற்ற நகரங்களோடு இணைந்திருக்கிறது. எனவே அந்த நகரங்களிலிருந்து வாடகை கார்கள் மூலம் ரீபந்தர் நகரை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ரீபந்தர் நகரின் கோயில்கள், தேவாலயங்கள் அனைத்தையும் பரிபூரணமாக பார்த்து ரசிப்பதற்கு உங்களிடம் ஒரு பைக் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக