வியாழன், 2 ஏப்ரல், 2020

அரசர்களின் உல்லாச நகரமாக இருந்த கெம்மனகுண்டி பற்றி அறிந்துகொள்ளலாம் வாங்க...!!

அரசர்களின் உல்லாச நகரமாக இருந்த கெம்மனகுண்டி பற்றி அறிந்துகொள்ளலாம் வாங்க...!!


கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும் அழகிய அருவிகள், அடர்ந்த காடுகள், பசுமையான பச்சை புல்வெளிகள் யாவற்றையும் கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.கெம்மனகுண்டி நகரம் ஒரு காலத்தில் கிருஷ்ணராஜ வடியார் மன்னருக்கு கோடை கால வாசஸ்தலமாக இருந்து வந்தது. அதன் காரணமாகவே இதற்கு கே.ஆர் குன்று என்ற சிறப்புப் பெயரும் உள்ளது. அவருடைய ஆட்சிக் காலத்தில் கெம்மனகுண்டியில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு, பூங்காக்கள் உருவாக்க்கப்பட்டு அந்த நகரமே ஆடம்பரமான உல்லாச நகரமாக காட்சியளித்தது. அதன் பின்னர் கிருஷ்ணராஜ வடியார், கெம்மனகுண்டியை கர்நாடக அரசுக்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்போது இந்த நகரம் கர்நாடக தோட்டக்கலை துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.கெம்மனகுண்டி நகரம் எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை அனைத்தையும் நீங்கள் ஒரே நாளில் காண்பதென்பது முடியாத காரியம். செங்குத்தான குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் இசட் முனையை அடைய 30 நிமிடங்கள் ஆகும். இதன் உச்சியிலிருந்து கெம்மனகுண்டி நகரை சுற்றியுள்ள பகுதிகளின் அழகிய காட்சிகளை பரிபூரணமாக கண்டு ரசிக்கலாம்.ஹெப்பே அருவி, காலஹஸ்தி மற்றும் கல்லதிகிரி என்ற பெயர்களில் அறியப்படும் கல்ஹட்டி நீர்வீழ்ச்சி போன்றவை கெம்மனகுண்டிக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். அதோடு விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்றும் இங்கு உள்ளது. முல்லயநாகிரி மற்றும் பத்ரா புலிகள் பாதுகாப்பு காடுகள் ஆகியவையும் கெம்மனகுண்டியின் முக்கிய சுற்றுலாத் தலங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக