தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என அழைக்கப்படும் கும்பகோணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க....!!
குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் என்னும் குட்டி நகரமானது, இணையாக ஓடும் இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ள கண்ணைக்கவரும் இனிமையான நகரமாகும். தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் இது. கும்பகோணத்தின் இரண்டு புறங்களிலும் காவிரி மற்றும் அரசலாறுகள் பாய்கின்றன. கும்பகோணத்தின் வடபகுதியில் காவிரியும், தென்பகுதியில் அரசலாறும் ஓடுகின்றன.கும்பகோணம் பல மிகச் சுவையான வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்திலேயே இந்நகரம் இருந்ததாக நம்பப்படுகிறது. தென்னிந்தியாவை ஆண்ட பண்டைக் கால அரச வம்சங்களான, சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆகியோரது ஆட்சிக் கட்டுப்பாட்டில் கும்பகோணம் இருந்துள்ளது.ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் கும்பகோணத்தைத் தம் தலைநகரமாக ஆக்கினர். அதன் பிறகுதான் இந்நகரம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. எனினும் வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்தான், கும்பகோணம் வளத்திலும், சிறப்பிலும் உச்சத்தை அடைந்தது. மதம் சார்ந்த கல்வி மற்றும் கலாச்சாரக் கல்வி ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க மையமாக இந்நகரம் திகழத்தொடங்கியதால், அப்போது இந்நகரம் "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது.குளிர்காலமே கும்பகோணத்திற்கு சுற்றுலா செல்வதற்கு உகந்த காலமாகும். சுற்றுலாப் பயணிகளும், யாத்திரீகர்களும் இக்காலத்தில் கும்பகோணம் செல்வதையே பெரிதும் விரும்புகின்றனர். கும்பகோணத்திற்கு சாலை வழியாகவும் இரயில் வழியாகவும் செல்வது எளிது. கோவில்களும், மடங்களும் நிறைந்த நகரத்தில் ஒளிந்துள்ள ஆச்சரியங்களை ஆராய சுற்றுலாப் பயணிகளை இந்நகரம் வரவேற்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக