வியாழன், 2 ஏப்ரல், 2020

பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரமான திமாபூர் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!!

பிரம்மாண்ட நதியின் அருகில் அமைந்திருக்கும் நகரமான திமாபூர் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...!!


இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் திமாபூர், நாகாலாந்து மாநிலத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அரசின் பெருமைமிகு தலைநகராக விளங்கிய திமாபூர் இன்று மாநிலத் தலைநகர் இல்லை என்றபோதும் தலைநகர்களுக்கே உரிய உள்கட்டமைப்புடனும், வசதிகளுடனும் சிறந்து விளங்கிறது. திமாசா மொழியில் 'தி' என்பது நீரையும், 'மா' என்பது பிரம்மாண்ட என்பதையும், 'பூர்' என்பது ஊரையும் குறிக்கிறது. பிரம்மாண்ட நதிக்கு அருகில் அமைந்திருக்கும் ஊர் என்பதே திமாபூர் என்பதன் பொருளாகும். இவ்வூரின் வழியாக தன்சிரி நதி ஓடுகிறது.பயணிகளின் கவனத்திற்காக சில புவியியல் தகவல்கள் 
நாகாலாந்தின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள திமாபூர் தென்கிழக்கில் கோஹிமா மாவட்டத்தாலும், வடக்கே அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தாலும், வடக்கே அசாமின் கோலகட் மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது. நாகாலாந்து மாநிலத்திலேயே ரயில் மற்றும் விமான வசதி கொண்ட ஒரே நகரமாக திமாபூர் திகழ்கிறது. நாகாலாந்துக்கு மட்டுமல்லாது மணிப்பூருக்கும் உயிர்நாடியாகத் திகழும் திமாபூர் வடகிழக்கு இந்தியாவின் முக்கியமானப் பகுதியாக விளங்குகிறது. 39ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை கோஹிமா, இம்பால் ஆகிய நகரங்களை இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கிறது. மியான்மர் எல்லையில் இருக்கும் மோரே எல்லை திமாபூர் வழியாகச் செல்கிறது.சுற்றுலாப்பயணிகளின் கவனத்திற்கு கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் 
நாகா கைவினைப் பொருட்கள் உலகெங்கும் புகழ்பெற்று விளங்குகிறது. திமாபூரில் அமைந்திருக்கும், மாநிலத்தின் மிகப்பெரிய கைவினைத்தறியில் இருந்து நாகா சால்வைகள் மற்றும் பிற பொருட்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதியின் புகழ்பெற்ற கலை மற்றும் கலாச்சாரப் பொருட்களின் முக்கியத்துவத்தை விரிவுபடுத்தும் பொருட்டு அரசால் இங்கு வடகிழக்கு மாகாண கலாச்சார மையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிருக்கும் அருங்காட்சியகத்தில் நாகாலாந்தின் பழங்கால கலைப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது அவ்வப்போது கலாச்சார விழாக்களும் நடத்தப்படுகின்றன.வரலாற்றுப் பாரம்பரியமிக்க வடகிழக்கு நகரமான திமாபூர் ஏராளமான சுற்றுலாத்தளங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. நகரின் மையப் பகுதியில் இருந்து 13கிமீ தொலைவில் அமைந்துள்ள டியெஜெஃப் கைவினை கிராமம் நாகாலாந்து கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. கலைப்பொருட்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் வண்ணம் இக்கிராமம் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள், மூங்கில் வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் இங்கு காணலாம். திமாபூரின் முக்கியமான சுற்றுலாத்தளமான பாதுகாக்கப்பட்ட ரங்காபஹார் வனப்பகுதி பல அரிய வகை பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சரணாலயமாகத் திகழ்கிறது. அசாமில் இருக்கும் நாகா ஹில்ஸ் மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்த சும்முகெடிமா சுற்றுலாத்தலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கர்பி-அங்லாங் மாவட்டத்தை உள்ளடக்கிய திமாபூரின் முழு அழகையும் கண்டுகளிக்கலாம். திமாபூரில் இருந்து 14கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுமுகெடிமா நகரம். உள்ளூர் மக்களுடன் பழகாத எந்த சுற்றுலாவும் நிறைவுப்பெற்றதாக ஆகாது. புத்துணர்ச்சியூட்டும் ருஜாபெமா பகுதியில் இருக்கும் வண்ணமயமான கடைகளில் உள்ளூர் கைவினைப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவ்விடத்தில் பயணிகள் உள்ளூர் மக்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். திமாபூருக்கு வருகை தரும் அனைவரும் ட்ரிபிள் நீர்வீழ்ச்சியை சுற்றிப் பார்த்தல் அவசியம். பெயருக்கேற்றார்ப்போல மூன்றி அடுக்குகளாய் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சாகசப் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக