சித்தூர் தென்கரை மகாராசா கோவில் வரலாறு
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூருக்கு அருகே உள்ளது சித்தூர் தென்கரை மகாராசா கோவில் நம்பியாற்றின் தென்கரையில் அமைந்திருப்பதால் தென்கரைமகாராசா கோவில் என அழைக்கபட்டதாக தெரிகிறது கோவில் அமைய பெற்ற சித்தூரின் பழைய பெயர் வன்னி களத்தி ஆகும் வன்னியராசா சாம்பான் ஆண்ட பகுதி என்பதால் வன்னியராசா வின் வழி வந்த சாத்தன் சாம்பானின் ஆளுகைக்கு உட் பட்ட எல்லைகளுக்குள் இவ்வூர் வருவதாலும் இப்பெயர் பெற்றதாக அறியமுடிகிறது (பார்க்க: தினகரன் நாளிதல் வசந்தம் இணைப்பு சாத்தான்குளம் ஜமீன் வரலாறு பகுதி:129 பக்கம்:13) கோவிலின் தென் மேற்கு மூலையில் தளவாய் மாடசாமி கோவில் உள்ளது தளவாய் மாடசாமி தென்கரை மகாராசா சான்பானின் தளவாய்(தளபதி) ஆக இருக்கலாம் தென் திருவிதாங்கூர் பகுதியில் தளபதிகள் தளவாய் என்றே அழைக்கபட்ட வரலாறுகளை வி.வி.சர்மாவின் திருவிதாங்கூர் சரித்திரம்(1932), தளவாய் வேலுத்தம்பியும் மார்ஷல் நேசமணியும் -தியாகி ஆ. சிங்காராயர், வேலுத்தம்பி தளவாய் -கே.பி.சுகுமார், மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள் மாவட்டதொல்லியல் வரலாறு போன்ற நூல்களின் வாயிலாகவும் அறியலாம் பண்டைய திருவிதாங்கூர் ஆளுகை நெல்லை வரை 18ம் நூற்றாண்டில் நிலை பெற்றிருந்ததாலும் இவ்வழக்கு சொல் இங்கும் நிலை பெற்றிருக்கலாம், வடக்கு பிறகாரத்தில் மருதானி மரத்தின் கீழ் பேச்சியம்மன் கோவிலும் உள்ளது, நம்பியாற்றின் கரையை ஒட்டி வடக்கு பக்கம் வன்னியராசா ( தற்போது வன்னியன் கோவில் என மறுவி விட்டது)கோவிலும், வட கிழக்கு மூலையில் வீரமனி சாம்பானின் கோவிலும் உள்ளது இக்கோவிலின் முன்னெதிரே வெளி ஓட்டுக்கூரை மண்டபம் உள்ளது இக்கோவிலை பெரிய கோவிலில் அருள் பாலிக்கும் மகாராசா சாம்பானே கி.பி:18 5ல் (கொல்லம் ஆண்டு:1060) கட்டியிருக்கிறார் பெரிய கோவிலை மேற்கூறிய வீரமணி சாம்பான் வன்னியராசா சாம்பான் போன்றோரின் வழி தோன்றலும் இப்பகுதியை கடைசியாக ஆட்சி புரிந்த மன்னர் சாத்தன் சாம்பானே கட்டியிருக்கிறார் இவர்களின் வரலாற்றை பார்க்கும் போது சாத்தன் சாம்பானுக்கு முன் மகாராசா சாம்பான் அவருக்கு முன் வன்னியராசா சாம்பான் என்ற ஆதிச்சன் சாம்பான் (இன்றும் தென் பகுதியில் உள்ள தென் கிளை சாம்பவர் இன மக்கள் வன்னியன் என்ற பெயரை வழிவழியாக இட்டு கொள்கிறார்கள்) இவர் பெயரில் ஆதிச்சன்காடு என்ற ஊர் உள்ளது வன்னிய ராசா சாம்பானுக்கு முன் அரசபுத்தன் சாம்பான் இவர் பெயரில் அரசூர் புத்தன் தருவை போன்ற ஊர்கள் உள்ளன இவருக்கு முன் சடையன் சாம்பான், சடையன் சாம்பான் பெயரில் இன்றும் சடையனேரி என்ற ஊரும் இவர் வெட்டிய கால்வாய் இன்றும் சடையனேரி மணிமுத்தூறு இனைப்பு கால்வாய் ஆக இன்றும் இப்பகுதியில் உள்ளது அவருக்கு முன் வீரமணி சாம்பான், அடைக்கல சாம்பான் என்று தொடர்ச்சியாக நீண்டு செல்கிறது இவர்கள் பாண்டிய வழி தோன்றல்கள் என்றும் மூன்றாம் குலோத்துங்கனுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த போரில் பாண்டியர்கள் வீழ்த்தபட்டு மீண்டும் சோழர்கள் க்கு கட்டுப்பட்டு பட்டு ஆட்சி புரிய சோழ பாண்டியர் களாக ஒப்பு கொண்ட போது பாண்டியர்களுக்குள்ளான நடந்த வாரிசுகளை போரில் முதலாம் சடையன் மாறவர்மனின் வழி தோன்றல்களான பாண சூர பாண்டிய வானகோவரைய சாத்தன் சாம்பவருக்கே வாரிசுரிமையை குலோத்துங்கன் அளித்து மணிமுடி சூட்டியதாகவும் அந்த வழி தோன்றள்களே இவர்கள் என்றும் படிப்படியாக முகலாயர்களின் படையெடுப்பிலும் நாயக்கர்களாலும் வீழ்த்தபட்டு படிப்படியாக ஜமீன் நிலைக்கு தள்ளபட்டதாகவும் மறைக்கபட்ட ஜமீன்களின் கதையை வணக்கம் மும்பை இதழில் எழுதியும் தேரிக்காட்டு சரித்திரம் எனும் நூலிலும் குங்குமம் ஆன்மீக இதழிலும் பதிவு செய்து இருக்கிறார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொக்கிஷம் வேண்டி பிரார்த்திக்கிறார்கள்! - Kungumam Tamil Weekly Magazine: Aanmeega palan, aanmeega palan magazine, anmega palan, aanmeegam, Tamil Magazine Aanmeega palan, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine , நம்பியாற்றின் வடக்கே பெரிய கோவிலின் எதிரே 1 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு வாய் செல்லியம்மன் அம்மன் கோவில் உள்ளது பெரிய கோவிலுக்கும் வடக்குவாய் வாய் செல்லியம்மன் கோவிலுக்கும் இடையே தேரோடும் வீதியும் வன்னி குத்து சடங்கு மேடையும் உள்ளது
கோவிலின் கருவறையில் சுவாமி சாய்ந்த நிலையில் உள்ளார் மூலவர் கையில் வேல் இருப்பதற்கு காரணம் திருச்செந்தூர் கோவிலில் கொடிமரம் நடுவதற்கு மகேந்திரகிரிமலையில் மரம் வெட்டி நம்பியாற்றில் பட்டுள்ளனர் மரம் ஆற்றில் மிதந்து வருவது தடைபட்டது தடை குறித்து பார்த்த போது சித்தூரில் அருள் பாலிக்கும் தென்கரை
மகாராசாவே தடைக்கு காரணம் என அறிந்து திருச்செந்தூர் முருகனை போல் தென்கரை மகாராசா சாம்பவர் க்கும் வேல் இட்டு வணங்கி வழி கேட்டனர் பின்னரே நம்பியாற்றில் கொடி மரத்தை இழுத்து செல்ல முடிந்தது
தென்கரை மகாராசா விற்கு பங்குனி ஆனி மாதங்களில் வருகிற உத்திர நட்சத்திரத்திலும் ஒவ்வொரு மாத இறுதியில் சனிக்கிழமைகளிலும் திருக்கார்த்திகை சிவராத்திரி ஆகிய சிறப்பு விழாக்களிலும் பூஜைகள் நடைபெறும்
மூலவரான தென்கரை மகாராசா சாம்பானுக்கு மூன்று வேலையும் பூஜை நடக்கிறது பங்குனி உத்திரம் 6ல் நாளொன்றுக்கு தளவாய் மாடசாமிக்கும் சிறப்பு பூஜை நடக்கிறது இத்திருவிழா காலங்களில் தென்கரை மகாராசா வின் வழி வந்த தென்கிளை சாம்பவர் மக்கள் மட்டுமின்றி வெள்ளாளர் நாடார் மறவர் பிராமணர் போன்ற சமூக மக்களும் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர் திருவனந்தபுரம் தொடங்கி இராமநாதபுரம் வரை பரவியுள்ள தென்கிளை சாம்பவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்காவது வன்னியராசன் மகராசன் சாத்தன் போன்ற பெயர்களை இன்றும் இட்டு கொள்வதை இன்றும் கானபடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக