வியாழன், 2 ஏப்ரல், 2020

மதுரையின் பழமையான நாகரீகம் பற்றி இப்பொழுது காண்போம்

மதுரையின் பழமையான நாகரீகம் பற்றி இப்பொழுது காண்போம்


உலகில் தோன்றிய மிக மிக பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்று. கி.மு.4000 முதல் கி.மு.2௦௦௦ ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறுப்பட்ட நாகரீகங்கள் தோன்றியிருந்தன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகம் போன்ற பல நாகரீகங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகமும் தோன்றியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றான. இது நமக்கு பெரும் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் இந்த செய்தி சமீபத்தில் மதுரையில் நடந்த அகழ்வாய்வுகள், இன்று நம் பார்வைக்கு காட்சி வடிவாகயிருக்கும் மதுரையை விட மிக செல்வ செழிப்பு மிக்க நகரமாக இருந்தது என்பதை உறுதி செய்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டைய காலம்தொட்டு இன்றைய நவீன எந்திரமயமான உலகம் வரை மதுரை மாநகரம் தமிழரின் பெருமையை பேவும் விதம் இருப்பதற்கு ஒரே காரணம், மூவேந்தர்களில் பாண்டியர்களே 16 ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி ஆட்சி நடத்திய குறிப்பையும், அவர்களின் தொடர்ச்சியாக நாயக்கர்கள் பாண்டியர்களின் பெருமை மிகு நகரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சுவடுகளில் திருமலை நாயக்கர் மகாலும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இன்றும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே திருமலை நாயக்கர் மஹால் மிகச்சிறப்பாக சுற்றுலாத்துறையால் பராமரிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு கம்பீரமாகவும், தொன்மை தொணியிலும் காட்சியளிக்கின்றது.
மதுரை நகரின் அமைப்பு சிந்து சமவெளி நாகரிகத்தை ஒத்து உள்ளது. மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும் பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரையின் பொற்காலமாக இருந்து உள்ளது. இன்றைய மதுரையின் பெரும்பாலான மையப்பகுதிகள் நாயக்கர்களால் கட்டப்பட்டதே. எல்லா இன்பமான வாழ்விற்கு பின்னும் பல இன்னல்களும் சோதனைகளும் நிச்சயம் இருந்திருக்கும் அது போல் தான் மதுரையும். சுல்தான்கள் நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல சோதனைகளையும், சாதனைகளையும் கண்டுள்ளது மதுரை மாநகர்.
மதுரை மாநகரின் தனி சிறப்பே அந்த நகரின் வடிவமைப்பு தான். மீனாட்சி அம்மன் கோயிலை மையமாக வைத்து அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழமையான மதுரையின் வரலாற்றுச் சான்றுகள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவமைப்புகளின் பட்டியலில் மதுரை மாநகரும் ஒன்று. ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் ஊர் மதுரையாக மட்டுமே இருக்கமுடியும். எந்த நேரமும் மக்கள் விழாவோடும் மகிழ்ச்சியோடுமே இருப்பார்கள். மதுரையில் சில தெருக்களின் பெயர்கள் தமிழ் மாதங்களின் பெயரில் அமைந்துள்ளது. சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி வீதி. இது மட்டுமல்ல நீர் நிலைகளின் பெயரைக்கொண்டே தங்களின் ஊருக்கு பெயரை வைத்து நீருக்கு மரியாதை செய்தார்கள். மாடக்குளம், ஆத்தி குளம், கரிசல் குளம் போன்றவை இதற்கு உதாரணம். மதுரை மக்களுக்கு பெருமை அளிக்கும் விதமாக தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக உள்ளதால் தான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் போன்ற பெரிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் மதுரையின் வரலாற்றுக்கென்றே ஒரு தனி கவன ஈர்ப்பு இருப்பதை நம்மால் உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக